கொஞ்சம் கூட அசாராத அண்ணாமலை... பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு..!

By vinoth kumar  |  First Published Mar 11, 2023, 6:41 AM IST

பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக ஆளுங்கட்சியான திமுகவே கூறி வந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். 


தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு மாவட்ட நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக ஆளுங்கட்சியான திமுகவே கூறி வந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு பாஜக ஐடி விங் தலைவர்  சிடிஆர் நிர்மல்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

Latest Videos

undefined

இதனையடுத்து, பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தனர். அப்போதில் இருந்தே பாஜக அதிமுக மோதல் உச்சம் அடைந்துள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தல் முன்னதாகவே கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழல் இருந்து வரும் நிலையில் கரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வி.ராஜ்குமார் அக்கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் வி.ராஜ்குமார் அவர்களை பாஜக கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒப்புதலோடு இதுவரை வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!