Tiruppur Election Result : 'குண்டு' வைத்த பாஜக.. டெபாசிட் கிடைக்காத திமுக.. இது என்னப்பா திடீர் ட்விஸ்ட் !!

By Raghupati R  |  First Published Feb 23, 2022, 1:40 PM IST

திருப்பூர் குண்டடம் 9வது வார்டில் 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட திமுக வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை போலவே  திருப்பூரிலும் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றி நிலையில் உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம்,காங்கேயம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட நகராட்சிகளில் திமுக கைப்பற்றியது. 

இதேபோல 15 பேரூராட்சிகளில் திமுக 14 பேரூராட்சி களையும் அதிமுக ஒரு பேரூராட்சியையும் கைப்பற்றியுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் 20 பேர் போட்டியின்றி தேர்வாகினர். 

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி உடுமலை நகராட்சியில் ஒருவர், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 13 பேர், மடத்துக்குளம் பேரூராட்சியில் ஒருவர், கொளத்துபாளையம் பேரூராட்சியில் ஒருவர், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பேர், மூலனூர் மற்றும் முத்தூர் பேரூராட்சிகளில் தலா ஒருவர் என மேற்கண்ட பேரூராட்சிகளில் 19 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 20 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் மொத்தம் உள்ள 5 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளில் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்திராவதி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குண்டடம் பகுதியில்  9வது வார்டில் 13 கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக பிரமுகரான ருத்திரகுமார் என்பவரது மனைவியான கிருத்திகா ருத்திரகுமார் சுமார் 77 சதவீத வாக்குகள், அதாவது 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான பாலாமணி என்பவர் 22 சதவீதம் வாக்குகள் அதாவது 63 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுதவிர கிருத்திகாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக வேட்பாளர் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளது கவனிக்கத்தக்கது.நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட, இதனை சுட்டிக்காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!