DMK vs BJP : ஆளுநருக்கு எதிராக கூடும் சட்டப்பேரவை கூட்டம்..! செக் வைக்க பாஜக எடுத்த முக்கிய முடிவு

By Ajmal Khan  |  First Published Nov 17, 2023, 12:34 PM IST

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


ஆளுநர் ரவி- தமிழக அரசு மோதல்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.  தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றது. இதனை அடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

 அந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்துவதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்த உச்சநீதிமன்றம், பதில் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்  10 சட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கே தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி வைத்துள்ளார். 

சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை  நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கும் வகையில் சட்ட மசோதா ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழர் சட்டப்பேரவை கூட்டமானது நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களுக்கு மீண்டும் ஒப்புதல் பெற்று ஆளுநருக்கு  அனுப்பப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

கூட்டத்தை புறக்கணிக்கும் பாஜக

இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக கூட்டப்படுகின்ற சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என பாஜக சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது  தொடர்பாக சபாநாயகருக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு.? வயிற்றில் என்ன பிரச்சனை- மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

click me!