காங்கிரஸை திசை திருப்ப கருத்துக் கணிப்பில் பாஜக சதி... உஷாரான ராகுல் காந்தி..?

By Thiraviaraj RMFirst Published May 20, 2019, 5:58 PM IST
Highlights

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பாஜகவின் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு எதிரான சதி.

தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் முழுமூச்சாக இறங்கியது காங்கிரஸ். அத்தோடு மூன்றாவது அணி அமைப்பவர்களை சந்தித்து சமரசம் செய்து காங்கிரஸ் காரியம் சாதிப்பதை தடுக்கவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இறுதி கட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணி அதிக சீட்டுக்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சி இதுதான் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.  வலுவான கூட்டணி, ஓயாத பிரச்சாரம் என எதுவும் கைகொடுக்கவில்லையே என வருத்தத்தில் இருக்கிறார் ராகுல் காந்தி என்கின்றனர். 

ராகுல் காந்தியின் இந்த வருத்தத்தை அறிந்த அரசியல் நண்பர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.  ’’தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தவறாக முடியவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ரிசல்டிற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ளது. அதுவரை தெளிவான முடிவுகள் வரும் வரை காத்திருங்கள். மனம் தளர வேண்டாம்.

 

அடுத்து நடக்க வேண்டிய அரசியல் பணிகளை கவனியுங்கள். இந்தக் கருத்துக் கணிப்பு காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு எதிரான சதி. தேர்தலுக்கு பிந்தைய முடிவுகள் சாதகமாக வந்தால், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அதை தடுக்கவே, இப்படி கருத்து கணிப்புகள் வந்துள்ளது. அதனால் இதை கண்டுகொள்ள வேண்டாம். நீங்கள் பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்’’ என அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

இதனை அடுத்தே ராகுல் காந்தி இன்று மீண்டும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளார். சந்திரபாபு நாயுடு மூலம் மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரையும் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி. கருத்துக் கணிப்புகளால் உஷாரான எதிர்கட்சிகள் இப்போது மூன்றாவது அணியை ஏற்படுத்தும் முயற்சியை கைவிட்டு மோடிக்கு எதிராக காங்கிரஸுக்கு ஆதரவாக களமிறங்க முடிவு செய்துள்ளனர்.  

click me!