திருமாவளவனுக்கு இதை பத்தி பேச தகுதி இருக்கா..? திருமா மீது பாய்ந்த எல்.முருகன் !!

Published : Feb 13, 2022, 09:32 AM IST
திருமாவளவனுக்கு இதை பத்தி பேச தகுதி இருக்கா..? திருமா மீது பாய்ந்த எல்.முருகன் !!

சுருக்கம்

விசிக திருமாவளவன் போன்றவர்கள் தான் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் எல்.முருகன்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு வருகின்றோம், 2014 க்கு பிறகு துப்பாக்கிச்சூடு போன்ற எந்த சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை, அந்த அளவிற்கு தமிழக மீனவர்களை மத்திய அரசு பாதுகாத்து வருகின்றது.

70 ஆண்டுகளில் முதன் முறையாக  மீனவர்களுக்கு ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் 70% கூடுதல் நிதி மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பாக மீண்டும் சுமூக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு ஜனநாயக நாடு எந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். 

தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்தவர்கள் தான் பாஜகவின் உறுப்பினர்களாக உள்ளனர். திருமாவளவன் மிகுந்த பயத்தில் உள்ளார்.  நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறார். பிறமாநிலங்களில் பட்டியலினத்தனர் நிதித்துறை போன்று முக்கிய இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் கடைசி பட்டியலில் உள்ளார் அதை திருமாவளவன் எதிர்த்து கேட்டிருக்க வேண்டும், ராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இதிகாசங்கள் அதைப்பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு தேசிய நூலான பகவத்கீதை தான் அந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதுச்சேரியில் பிரதமரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும், தென் இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது பெருமை சேர்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!