இங்கே வாங்க... டி.டி.வி.தினகரனுக்கு பாஜக அழைப்பு... சசிகலாவுக்கு சமிக்ஞை காட்டும் அமித் ஷா..!?

By Thiraviaraj RMFirst Published Aug 2, 2021, 10:46 AM IST
Highlights

 அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் கடும் அப்செட் ஆகி விட்டனர். 

சிறை சென்று ரீலீசான பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக கூறிய சசிகலா, அதிமுக தேர்தலில் தோற்றபிறகு அக்கட்சியை கைப்பற்றியே தீருவேன் என விடாப்பிடி காட்டி வருகிறார். இதனால் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானம் போட்டு வருகின்றனர். அவ்வப்போது தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சசிகலா. ஊடகங்களில் தனக்கும் அதிமுகவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் கடும் அப்செட் ஆகி விட்டனர். மேலும் சசிகலா இன்னும் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை டெல்லி சென்ற ஓ.பி.எஸும், எடப்பாடி பழனிசாமியும், மோடியிடமும் அமித்ஷாவுடனும் பகிர்ந்துள்ளனர்.

அப்போது அமித் ஷா, இப்போதுவரை அதிமுக உங்களிடம் தானே இருக்கிறது. சசிகலா- டி.டி.வி.தினகரனை கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஓ.பி.எஸும், எடப்பாடி பழனிசாமியும், ‘’இந்த விவகாரத்தை இப்படியே விட்டாம் கட்சிக்குள் குழப்பம்தான் நீடிக்கும். இதற்கு ஒரு முடிவுகட்டியே ஆக வேண்டும்’’என வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனையடுத்து டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு அழைத்து பேச அமித் ஷா முடிவெடுத்துள்ளாராம். டி.டி.வி.தினகரன் மூலம் சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு விரைவில் முட்டுக்கட்டை போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் உள்ள குழப்பம் முடிவுக்கு வரும் என ஓ.பி.எஸும், எடப்பாடி பழனிசாமியும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 

click me!