ஒரே ஆண்டில் பலகோடி உயர்ந்த பாஜக சொத்து மதிப்பு…. சொத்து மதிப்பு சரிந்த காங்கிரஸ் !!

Published : Aug 02, 2019, 08:25 AM IST
ஒரே ஆண்டில் பலகோடி உயர்ந்த பாஜக சொத்து மதிப்பு…. சொத்து மதிப்பு சரிந்த காங்கிரஸ் !!

சுருக்கம்

பாஜக-வின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு, கடந்த ஓராண்டில் மட்டும் 22.27 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 213 கோடியே13 லட்சமாக இருந்த சொத்துமதிப்பு, 2017-18 நிதியாண்டில், ஆயிரத்து 483 கோடியே35 லட்சமாக உயர்ந்துள்ளது.  

அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து,‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்புக் கழகம் (ADR)’ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த ஆய்வில் தான் பாஜக சொத்து மதிப்பு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

பாஜகவுக்கு அடுத்தபடியாக, திரிணாமூல் காங்கிரசின் சொத்து மதிப்பு சுமார்10.86 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் ரூ. 26 கோடியே 25 லட்சமாக திரிணாமூல் சொத்து மதிப்பு, 2017-18 நிதியாண்டில்ரூ. 29 கோடியே 10 லட்சமாகஉயர்ந்துள்ளது.


 
பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு 2016-17இல் ரூ. 680 கோடியே 63 லட்சமாக இருந்தது, சுமார் 5.30 சதவிகிதம் அதிகரித்து ரூ. 716 கோடியே72 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதேகாலகட்டத்தில், 2016-17 முதல் 2017-18 வரைரூ.854 கோடியே 75 லட்சம் என்ற அளவிலிருந்த காங்கிரசின் சொத்து மதிப்பு, ரூ. 724 கோடியே 35 லட்சமாக சுமார்15.26 சதவிகிதம் குறைந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை