ஏப்.8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது பாஜக... சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்!!

Published : Apr 04, 2022, 08:16 PM IST
ஏப்.8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது பாஜக... சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்!!

சுருக்கம்

தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணைம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-2022 ஆம் ஆண்டில் சொத்து வரி தள வீதங்களை (Floor Rates) அறிவிக்க வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

இந்தக் காரணங்களால் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், குடியிருப்பு, வணிகக் கட்டடங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டுக் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 600 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 சதவிகிதமும், 601 முதல் ஆயிரத்து 200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், ஆயிரத்து 201 முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 75 சதவிகிதமும், ஆயிரத்து 800 சதுர அடிக்கும் அதிகமுள்ள கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்துவரி உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 150 சதவீதம் வரை சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது மக்கள் விரோதப் போக்காகும் என்றும், தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்.8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!