எனக்கு ஆஸ்கர் விருது…? மகிழ்ச்சி… வைரலான பாஜக அண்ணாமலை டுவிட்டர்

Published : Oct 05, 2021, 06:55 PM IST
எனக்கு ஆஸ்கர் விருது…? மகிழ்ச்சி… வைரலான பாஜக அண்ணாமலை டுவிட்டர்

சுருக்கம்

பாஜக நிர்வாகிகள் தமக்கு அளித்த ஆட்டுக்குட்டி ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி இருக்கிறது.

ஈரோடு:  பாஜக நிர்வாகிகள் தமக்கு அளித்த ஆட்டுக்குட்டி ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி இருக்கிறது.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் அண்ணாமலை. சமூக வலைதளங்களில் என்ன விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதில் விமர்சனமும் வைத்து தூள் பண்ணுகிறார்.

இன்னும் சொல்லப்போனால் சமூக வலை தளங்களில் மிகுந்த ஆக்டிவ்வாகவும் அண்ணாமலை இருக்கிறார். இந் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டர் பதிவு பாஜகவினர் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

திருப்பூர் குமரனின் பிறந்த நாள் விழாவில் மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வந்துள்ளார் அண்ணாமலை. அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து திணறடித்தனர். பின்னர் அங்குள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

பிறகு, சென்னிமலை சென்று திருப்பூர் குமரன் வீட்டில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது சென்னிமலை பாஜக நிர்வாகிகள் அவருக்கு ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார்கள். அதை இன்முகத்துடன் ஏற்று மகிழ்ந்த அண்ணாமலை இந்த விவரத்தை தமது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னிமலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் எனக்கு ஒரு ஆட்டு குட்டியை பரிசாக தந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி, அதிலும் கொங்கு மண்டலத்தின் வேளாண் சின்னமாக, நம் பண்பாட்டின் விழுமியமாக நான் ஆட்டுக்குட்டியை பார்க்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு பாஜக நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!