Annamalai: அமைச்சர் காந்தியின் வாந்தியை வரவேற்கிறேன்.. பொளந்து தள்ளிய அண்ணாமலை

By manimegalai aFirst Published Dec 16, 2021, 7:17 PM IST
Highlights

தம்மை பற்றி அமைச்சர் காந்தி ஒருமையில் பேசிய வாந்தியை வரவேற்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.

நாமக்கல்: தம்மை பற்றி அமைச்சர் காந்தி ஒருமையில் பேசிய வாந்தியை வரவேற்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக  -  பாஜக இடையே எல்லா தளத்திலும் எதிர்மறையான கருத்துகளும், கண்டனங்களும் எழுந்து வருகின்றன. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த போதும் திமுகவை திட்டி தீர்த்த பாஜக இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் இந்த தருணத்திலும் போட்டு தாக்கி வருகிறது.

குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போகிற இடங்களில் திமுகவை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அட்டாக் செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கடுமையான கருத்துகளை கூறி வருகிறார்.

திமுகவில் கருத்து சுதந்திரமே இல்லை என்ற அளவுக்கு கடுமையாக அண்ணாமலை பேசி வருகிறார். இப்படி கருத்து மோதல்கள் எழுந்து வரும் தருணத்தில் அமைச்சர் காந்தி அண்ணாமலையை ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

அண்ணாமலை எல்லாம் ஒரு தலைவனா? வாய்க்கு வந்தபடி பேசும் அண்ணாமலை படித்தவர் மாதிரி பேச வேண்டாமா? என்று அமைச்சர் காந்தி கடுமையாக விமர்சித்து தள்ளி உள்ளார். அவரின் இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் முணுமுணுப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந் நிலையில், அமைச்சர் காந்தியின் பேச்சை விமர்சித்து அண்ணாமலை பதிலடி தந்துள்ளார். இது குறித்து நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அரசியலில் இப்படி பேசுவது எல்லாம் சகஜம்தான். ஆனால் காந்தி என்று இப்படி பேர் வைத்துவிட்டு வாந்தி எடுக்கிறார், அப்படித்தான் சொல்லணும். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தாலும் பாஜக வளரும். எங்கள் கட்சி அடுத்தக்கட்டத்துக்கு போய்விட்டது.

திமுக அமைச்சர்கள் ஆவேசம் அடைந்து, பொறுமை இழந்து பேச ஆரம்பித்து விட்டனர். இதை தான் எதிர்பார்த்து நாங்கள் காத்து கொண்டிருக்கின்றோம். எங்கள் வலைக்குள் திமுக அமைச்சர்கள் விழ ஆரம்பித்துவிட்டார்கள்.

அவங்க ஒருமையில் பேசணும், அப்போது தான் எங்கள் கட்சி அடுத்த லெவலுக்கு போகும். ஆகையால் நான் காந்தி எடுத்த வாந்தியை வரவேற்கிறேன்.

திமுகவினர் தொடர்ந்து பிரதமர் மோடியை அவதூறாக பேசினால் எங்கள் பேச்சும் அதேபோன்று தான் இருக்கும். இவர்கள் ஆபாசமாக பி, சி டீம் என ஆள் வைத்து தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்கள் என்றால், பாஜகவுக்கு பேச தெரியும், ஆனால் நாங்கள் பேச வேண்டாம் என்று இருக்கிறோம்.

என்னுடைய பதில் எப்போதும் ஆக்ரோஷமாக, காட்டமாக இருக்குமே தவிர அநாகரிகத்தை தாண்டி போனதே இல்லை. எதுக்காக ஒவ்வொரு அமைச்சருக்கும் கோபம் வருகிறது? 

நாங்கள் நேர்மையாக புள்ளிவிவரமாக கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு திமுகவினரின் பதிலடியும் வேறு விதமாக தான் இருக்கிறது.

எங்களை அநாகரிகமாக பேசுகிறார்கள் என்று சொல்லும் இதே அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு மிதிச்சிடுவேன் என்று பேசவில்லையா? ஆக்ரோஷமாக பேசுவதாக கூறிக் கொண்டு தேவையற்ற விமர்சனங்களை அவர் முன் வைத்து வருகிறார் என்று கூறி உள்ளனர்.

click me!