"நான் ஆம்பள சிலுக்கு” .. எல்லா படத்திலும் என்னை.. ஓபனாக பேசிய எஸ்.வி சேகர்..

Published : Dec 16, 2021, 07:02 PM ISTUpdated : Dec 16, 2021, 07:03 PM IST
"நான் ஆம்பள சிலுக்கு” .. எல்லா படத்திலும் என்னை.. ஓபனாக பேசிய எஸ்.வி சேகர்..

சுருக்கம்

எனவே  இளைஞர்கள் அவரவர்கள் தனது தாய் தந்தைகளை பின்பற்றுங்கள், வழிபடுங்கள் மேக்கப் போடுகிறது நடிகர்களை பின்பற்றாதீர்கள். நான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவன் என்றாலும் எனக்கு சினிமாவில் ரசிகர் மன்றம் கிடையாது என்றார்.  

தமிழகத்தில் 6600 மேடை நாடகங்களில்  படித்தவன் நான் நான் நடிக்காத திரைப்படங்களே இல்லை எனக்கு ஆம்பள சிலுக்கு இன்று ஒரு பட்டப் பெயரும் இருந்தது என காமெடி நடிகர் எஸ் வி சேகர் மனம் திறந்து பேசியுள்ளார். இளைஞர்கள் தங்களது பெற்றோர்களை வணங்க வேண்டுமே தவிர சினிமா நடிகர்களை வழங்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் தவறான கருத்தை பதிவிட்டு கைதாகும் நிலைக்கு சென்றவர் எஸ்.வி சேகர். சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் என்பது சுருக்கமே எஸ்.வி சேகர். தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் நாடகக் கலையில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆவார். சிறுவயது முதலே நாடகக்கலையில் கற்றுத் தேர்ந்தவர் இவர். ஒளிப்பதிவாளர், விஷ்வல் எடிட்டர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் எஸ்.வி சேகர். ஆயிரத்து 1974 ஆம் ஆண்டு நாடகப்பிரியா என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். இதுவரை 24க்கும் அதிகமான நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நாடகங்களில்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கான சென்சார் போர்டில் மாநில தலைவராகவும் பணியாற்றினார். தனக்கு சினிமாவில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி 2006 ஆம் ஆண்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கிய எஸ்.வி சேகர் அதில் வெற்றி பெற்றார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் 2009-இல் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

அதன்பிறகு காங்கிரசுக்கு சென்று பின்னர் அங்கிருந்து 2013ல் பாஜகவில் சேர்ந்தார் அவர். தற்போதும் அக்காட்சியில் சைலண்ட் மோடில் இருந்து வருகிறார் அவர். திரைத் துறையில் சாதிக்க முடிந்த அவரால் அரசியலில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போனதற்கு அவர் வாய்துடுக்காக பேசும் கருத்துக்களும் அதனால் ஏற்படும் சர்ச்சைகளும்தான் என்ற விமர்சனமும் அவர்மீது உள்ளது. யாராக இருந்தாலும் அவர்களை வெளிப்படையாக விமர்சிப்பவராகவே எஸ்.வி சேகர் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிக அசிங்கமாக பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதுவரை நீதிமன்றத்தில் அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் சென்னை உயர்நீதிமன்றமே ' நீங்கல்லாம் படித்தவர்களா' எப்படி நீங்கள் பெரிய மனுஷன் என்று வெளியில் சொல்லிக் கொள்கிறீர்கள் என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தது, தன் பேச்சுக்கு அப்போது அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார். அதேபோல 2000 ரூபாய் நோட்டு கொண்டுவரப்பட்ட சமயத்தில் அவர் ரூபாய் நோட்டில் " சிப் "வைக்கப்பட்டு இருக்கிறது என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் இன்னும்கூட அவரை சிப் சேகர் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இப்படி அடுக்கடுக்காக பல சர்ச்சைகளில் சிக்கிவரும் எஸ்.வி சேகர் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் உரிய அங்கிகாரம் இன்றி ஒதுங்கி இருந்துவருகிறார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், அதில் நடிகர் கமலஹாசனை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நடிகர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் சிவனை தாழ்த்தி பேசுவதாக ஒரு விமர்சனம் அவர் மீது இருக்கிறதே என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.வி சேகர், கமலஹாசனுக்கு சாமி நம்பிக்கை இல்லை என்று அவர் வெளியில் சொல்லிக் கொள்கிறார், இருக்கிறதா? இல்லையா? என்பதை அவர் வீட்டில் பூஜை அறையை பார்த்தால் தெரியும். கமலஹாசன் அய்யங்கார் என்பதால் தான் வைணவத்தை சேர்ந்தவர் என்பதால் வைணவ முறையை அவர் தூக்கிப் பிடிக்கிறார். ஒரு புறம் நான் அய்யங்கார் என்றும், இன்னொரு புறம் நான் எல்லாருக்கும் சொந்தமானவன் என்றும் ஏதோ மக்களுக்காக உயிரையே கொடுப்பவர் போல நடிக்கிறார். மொத்தத்தில் கமலஹாசனின் இது போன்ற வாழ்க்கை வரலாறுகளை தெரிந்துகொண்டு எனக்கு ஒன்றும் வரப்போவதில்லை. எனவே  இளைஞர்கள் அவரவர்கள் தனது தாய் தந்தைகளை பின்பற்றுங்கள், வழிபடுங்கள் மேக்கப் போடுகிறது நடிகர்களை பின்பற்றாதீர்கள்.

நான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவன் என்றாலும் எனக்கு சினிமாவில் ரசிகர் மன்றம் கிடையாது என்றார். அப்போது, நீங்கள் ஒரு பெரிய நடிகராகி உங்களுக்கு சினிமா ரசிகர் மன்றம் இருந்திருந்தால் என அப்போது அந்த நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.வி சேகர், நான் ஏன் பெரிய நடிகனாக வில்லை? எனக்கு ஆம்பள சில்க்கு என்று பட்டப் பெயர் இருந்தது உங்களுக்கு தெரியுமா? நான் இல்லாத படமே இருக்காது? நான் அதிகம் விருப்பப்பட்டு  படங்களை தேர்வு செய்வதில்லை. எனக்கு நாடகம் தான் முக்கியம் என்று திரும்பிவிட்டேன். தமிழ்நாட்டில் இதுவரை 6600 மேடை நாடகங்களை நான் நடித்திருக்கிறேன். ஒரே நாளில் எட்டு நாடகங்கள் நடித்திருக்கிறேன். அது இன்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே நாளில் நாடகம் தொடர்கான 32 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறேன். இப்படி எனக்கு எத்தனையோ புகழ் இருந்தாலும் அதை நான் வெளியில் பேசுவதில்லை, மற்றவர்கள் என்னைப் பற்றி பேச வேண்டும் என்றும் நான் எதிர்பார்ப்பதில்லை. எத்தனையோ பேருக்கு நான் உதவிகளை செய்து இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெருந்துறையில் இடம் மாறும் விஜய் பிரச்சாரம்..! அடேங்கப்பா உள்குத்து அரசியல்..! புகுந்து விளையாடும் திமுக- அதிமுக புள்ளிகள்..!
கடப்பாறை... தீயணைப்பு வண்டி... கதி கலங்கும் சவுக்கு சங்கர் வீட்டு ஏரியா.. எந்த நேரமும் அரெஸ்ட்