"ரஜினியை அர்ஜூன் சம்பத் சந்தித்தது அதிகப்பிரசங்கித்தனம்" : பாயும் பாஜகவும் அசால்ட் இமகவும்!!!

Asianet News Tamil  
Published : Jun 23, 2017, 01:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
"ரஜினியை அர்ஜூன் சம்பத் சந்தித்தது அதிகப்பிரசங்கித்தனம்" : பாயும் பாஜகவும் அசால்ட் இமகவும்!!!

சுருக்கம்

BJP angry on Rajini arjun sampath meeting

காங்கிரஸ் இந்தியாவை ஆண்டபோது ‘இந்த தேசத்தில் பெரும்பான்மை (இந்துக்கள்) தான் சிறுபான்மையாக இருக்கிறது. தேசிய சலுகைகளை பெறுவதில் இந்துக்களை ஒதுக்கி வைக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள்.’ என்று பத்தி பத்தியாக சமத்துவ வாதம் பேசித்தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. 

ஆனால் அதே பா.ஜ.க.வே, பெரும்பான்மையின் உரிமைக்காக போராடும் இந்துத்வ அமைப்புகளை ஒதுக்கி வைத்து புறக்கணிக்கும் கூத்து உங்களுக்கு தெரியுமா? இது உண்மையா அல்லது பொய்யா? என்று இந்துமக்கள் கட்சியின் தமிழ் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்தை கேளுங்கள் மிக அழுத்தமாக சொல்வார் ‘ஆம், ஆம் ஆமாம்’ என்று. 

பா.ஜ.க.வுக்கு தன்னை துதி பாடிட, தூக்கி பிடித்திட, தன் சாதனை பற்றி பிரச்சாரம் செய்திட தீவிர இந்து அமைப்புகள் வேண்டுமே தவிர, அவர்களுடன் ஒன்றாக நின்று தோளில் கைபோட்டுவிட பிடிக்காது. காரணம்?...தேர்தல் அரசியலில் பா.ஜ.க. இருப்பதால் இஸ்லாமியர் மற்றும் கிறுத்தவர்களின் மத்தியிலும் வாக்கு கேட்க வேண்டியிருக்கும்.

அது போன்ற சூழல்களில், தீவிர இந்துத்வ அமைப்புகளுடனான தனது நெருக்கமும், நட்பும் இடைஞ்சலாக வரலாமென்கிற சுயநல பயம்தான். 

அதனால்தான் தேர்தல் காலங்களில் தங்களுக்கு ஆதரவளிப்போர் பட்டியலை வெளியிடும்போது இந்துமக்கள் கட்சி போன்ற அமைப்புகளின் பெயரை எடிட் செய்துவிடுவார்கள். இதை அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் பல முறை உரக்க பேசியிருக்கிறார்கள். 

சரி, இப்போது அதற்கு என்ன என்கிறீர்களா?...விஷயம் இருக்கிறது. நடிகர் ரஜினியை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசித்ததை பா.ஜ.க. சுத்தமாக விரும்பவில்லையாம். அதிலும் தமிழக பா.ஜ.க.வுக்கு ஏக எரிச்சலாம். 

இ.ம.க.வின் இந்த செயலை ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்றே கொட்டியிருக்கிறார்கள் பா.ஜ.க.வின் உள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில். ரஜினியின் அரசியல் மூவ்களின் பின்புலமாக பா.ஜ.க. இருக்கிறது என்கிற வலுவாக இருக்கும் நிலையில் அந்த முத்திரையை அழிக்கத்தான் நினைக்கிறது பா.ஜ.க. அதனால்தான் மாநிலத்தில் தமிழிசையும், மத்தியில் அமித்ஷாவும் ரஜினி பற்றி சிலநேரங்களில் கருப்பட்டியாகவும், பல நேரங்களில் கடுப்பாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் கொடுக்கிற உந்துதலில் என்னதான் ரஜினி நாளை கட்சி ஆரம்பித்தாலும் அதன் பின்னணி தாங்கள்தான் என்கிற வாதம் நிலைபெற்றுவிட கூடாது என்பதே பா.ஜ.க.வின் எண்ணம். 

இதனால் ரஜினி விஷயத்தில் கழுவும் மீன்களில் நழுவும் மீனாக பா.ஜ.க. இருக்கிறாது. இந்த சூழலில் ‘ரஜினி உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவருக்கு பாதுகாப்பு வேண்டும்.’ என்று அன்றே இந்துமக்கள் கட்சி மனு அளித்தபோது ’சரி ஏதோ வழக்கமான கூத்து.’ என்று அலட்சியமாய் விட்டுவிட்டது தமிழக பா.ஜ.க.

ஆனால் காலாவின் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியை ஜஸ்ட் லைக் தட் ஆக இந்துமக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் தனது நெருங்கிய பரிவாரத்துடன் மீட் செய்ததை பா.ஜ.க. சுத்தமாக எதிர்பார்க்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. 

இது ஏன்? என்று விளக்கும் அரசியல் பார்வையாளர்கள் ‘சம்பத்தின் இந்த நடவடிக்கையானது தங்களது ப்ராடெக்டான ரஜினியை ஒரு இந்துத்வ மனிதர் என்று அடையாளப்படுத்திவிடும். பிறகு அவரை வைத்து சிறுபான்மை வாக்கு வங்கிகளை சுகிக்க முடியாமல் போய்விடும்.’ என்று பா.ஜ.க. பயப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக ரஜினியை பா.ஜ.க. இயக்கவில்லை என்று அர்ஜூன் சம்பத் கூறியது ‘டாடி இஸ் நாட் இன் சைடு தி குதிர்!’ என்பது போலவே இருப்பதாக பா.ஜ.க. நினைக்கிறதாம். இதுதான் அவர்களின் காட்டத்திற்கான உச்சபட்ச காரணமாம். இதன் விளைவாக ’இ.ம.க.வின் துள்ளலை அடக்கி வைக்க வேண்டும்.’ என்று தமிழக பா.ஜ.க.வுக்குள் முக்கியஸ்தர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறதாம். 

ஆனால் இதற்கெல்லாம் அஞ்சியவர்களா அர்ஜூன் சம்பத்தின் பரிவாரத்தினர்! பா.ஜ.க.வின் புகைச்சலை அல்ரெடி எதிர்பார்த்திருந்த அர்ஜூன் சம்பது இப்போது ரஜினி மிக விரைவாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரி அடுத்த கட்ட பொது நிகழ்வுக்கு அசால்ட்டாக தயாராகிவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!