இன்றைய தேதியில் அதிமுக பிஜேபி கூட்டணிக்கு 12 தொகுதிகள் கேரண்டி..!! எந்தெந்த தொகுதிகள் யார் யார் ஜெயிப்பாங்க?

By sathish kFirst Published Feb 20, 2019, 10:56 AM IST
Highlights

பிஜேபி + அதிமுக + பாமக + தேமுதிக இந்த நான்கு கட்சிகள் மற்றும் பிஜேபியில் இடம்பெறும் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளின் பலத்தால் இன்றைய தேதியில் இந்த கூட்டணிக்கு 12 தொகுதிகள் கேரண்டி வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

செவ்வாய்கிழமை, நல்ல நாள்.. மாசி பவுர்ணமி என்று நாள், கிழமை பாரத்து  கூட்டணி அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அதிமுக-பாஜக உள்ளிட்ட கூட்டணி பற்றின இறுதி முடிவுகள், பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் மட்டுமே கையெழுத்தானது. அதேபோல பிஜேபிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பேரம் படியாததால் மட்டும் தேமுதிகவோடு கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. 

பிஜேபி + அதிமுக + பாமக + தேமுதிக இந்த நான்கு கட்சிகள் மற்றும் பிஜேபியில் இடம்பெறும் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளின் பலத்தால் இன்றைய தேதியில் இந்த கூட்டணிக்கு 12 தொகுதிகள் கேரண்டி வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதில், கன்னியாகுமரியி்ல் பொன்.ராதாகிருஷ்ணன், நெல்லை நயினார் நாகேந்திரன், தென்காசி டாக்டர் கிருஷ்ணசாமி, தேனி ஓபிஎஸ் மகன் ஓபிஆர், ஆரணி அன்புமணி, வேலூர் ஏசி சண்முகம், கிருஷ்ணகிரி கே.பி.முனுசாமி, சேலம் எடப்பாடியார் சொந்த தொகுதி, ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம் (தனி), பொள்ளாச்சி பலம் டஃப் பைட்டு கொடுக்கும். 

தேனி ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத்;  தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஆர்க்கு சொந்த செல்வாக்கு, அசுர பண பலம், படை பலம், ஏற்கனவே செஞ்சி வச்ச வேலை, கூடுதலாக விஜயகாந்த் ரசிகர்கள்.

 


 
விழுப்புரம் (தனி); விழுப்புரம் தொகுதியில் பாமக அசுர பலத்தோடு இருப்பதாலும் சிவி சண்முகத்தின் படை, பண பலம் சொந்த செல்வாக்கு. அதேபோல் மாவட்ட முழுவதும் நிறைம்பி இருக்கும் விஜயகாந்த் ரசிகர்களால் திமுகவுக்கு தலைவலிதான்.

ஆரணி அன்புமணி; வட மாவட்டங்களில் பாமகவுக்கென்றே தனி பலம் உள்ளது, திமுகவிற்கு அடுத்த இடத்தில் பாமகவுக்கு தான் வாக்கு வங்கி அடுத்ததாக பாமகவைப் போலவே விஜயகாந்துக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி, இந்த தொகுதியில் சிவி சண்முகம் அண்ணனான நியூஸ் ஜெ MD ராதாகிருஷ்ணனுக்கு செல்வாக்கு உண்டு. ஆகையால் அவருக்கு ராஜ்யசபா சீட்டு உண்டு என்பதால் இறங்கி வேலைபார்ப்பார். 

 

ஏ.சி.சண்முகம்; வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பரிட்சயமான தொகுதிதான் அதுமட்டுமல்லாமல், பாமகவுக்கு பலமான வாக்கு வங்கி, படை பலம்,  இரட்டை இலை சின்ன கூடுதல் பலம் , சொந்த பணம், கடைசியா ரஜினியின் மறைமுக ஆதரவு என ஈஸியா ஜெயிச்சிடுவாரு. 

சேலம்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதி என்பதால்,  வெற்றி பெற்றே ஆகவேண்டிய  கட்டாயம் உள்ளதால் பணத்தை வாரி இறைத்து ஜெயிக்க வைத்துவிடுவார்.

தென்காசி டாக்டர் கிருஷ்ணசாமி; ஜாதி ஒட்டு ஒன்றரை லட்சம், அதிமுக வாக்கு வங்கி கூடுதல் பலம் + திகட்ட திகட்ட பணம் என அசால்ட்டா ஜெயித்துவிடுவார்.

கன்னியாகுமரி பொன்.ராதா கிருஷ்ணன்; கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என டஃப் பைட் கொடுத்தாலும் பொன்னர் கடைசி நேரத்தில் விட்டமின் "ப" வை இறங்குவார். கடந்தமுறை மூன்றாவது அணி அமைத்தே ஜெயித்தவர் என்பதால் வெற்றி நிச்சயம்.

நெல்லை நயினார் நாகேந்திரன்; பணபலம், சொந்த செல்வாக்கு அதிமுக வாக்கு வங்கி என மூன்றும் பலமாக இருப்பதால் வெற்றி கேரண்டி.

திருப்பூரில் வானதி சீனிவாசன்;  பிஜேபி வாக்கு வங்கி, தேமுதிகவுக்கு மட்டுமே ஒருலட்சம் வாக்கு, விட்டமின் "ப" புகுந்து விளையாடும்.

கோவை சி.பி. ராதாகிருஷ்ணன்; பிஜேபிக்கு என்றுமே செல்வாக்கான தொகுதியாக அறிவிக்கப்படும் கோயமுத்தூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, சொந்த செல்வாக்கு, பிஜேபி + இந்து முன்னணி வாக்கு வங்கி அதிகமாக ஒட்டு வாங்கி ஜெயிப்பார்.

கிருஷ்ணகிரி கே.பி.முனுசாமி; அதிமுக அதிகமுறை வென்ற தொகுதி, கே.பி முனுசாமிக்கென்றே தனி செல்வாக்கு, பாமகவுக்கு காவேரிப்பட்டினம் பக்கம் உள்ள கணிசமான வாக்கு வங்கி மற்றும் எதிரிகளோடு ஃபைட் பண்ண பணம் என பலமான முனுசாமி பக்கவா வெற்றி பெறுவார் என சொல்லப்படுகிறது.

ஈரோடு தொகுதியில் சுற்றி சுற்றி அதிமுகவுக்கென்றே தனி வாக்கு வங்கி உள்ளதால், அதிமுக கூட்டணி கட்சிகளைத் தவிர யாராலும் ஜெயிக்க முடியாது.

தர்மபுரி , விழுப்புரம், பொள்ளாச்சி தென்சென்னை, இதெல்லாம் பயங்கர டஃப்பாக இருக்கும் தொகுதிகள் ஆனாலும் 12 தொகுதிகள் கண்டிப்பாக கைப்பற்றுமாம்.

குறிப்பு; கடைசி நேரத்தில் அதிமுக அணி சில அஸ்திரங்களை வைத்திருக்கிறார்களாம். அதாவது ஓபிஎஸ் மகன் ஓபிஆர் மாதிரி பணபலம், சொந்த செல்வாக்கு உள்ள கைகளை களத்தில் இறக்கி விளையாட விட இருப்பதாக சொல்லப்படுகிறது.

click me!