புதுச்சேரியை அடிச்சு தூக்கும் பாஜக கூட்டணி... எல்லாக் கருத்துக்கணிப்பிலும் வெற்றி முகம்..!

Published : Apr 29, 2021, 08:57 PM IST
புதுச்சேரியை அடிச்சு தூக்கும் பாஜக கூட்டணி... எல்லாக் கருத்துக்கணிப்பிலும் வெற்றி முகம்..!

சுருக்கம்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று வாக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த யூனியன் பிரதேசம் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக ஓர் அணியாகவும் காங்கிரஸ்-திமுக-விசிக-சிபிஐ இன்னொரு அணியாகவும் களமிறங்கின. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 9 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் களமிறங்கின. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் விசிக, சிபிஐ தலா ஒரு தொகுதியிலும் களமிறங்கின.
ஏப்ரல் 6 அன்று தேர்தல் முடிந்த நிலையில், மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 16-20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 11 - 13 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. 
ஏபிபி-சி வோட்டர் கருத்துக்கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 19 - 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி 7 - 11 தொகுதிகளிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில்  என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

உண்மையை போட்டுடைத்த பெருமாள் முருகன்.. பொங்கியெழுந்த முதல்வர் விஜய்.. பெரியார் அறிவுலக‌த்தில் நடந்தது என்ன?
பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல‌.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?