கட்சி மாறியவர்களை சேர்த்து, சேர்த்து பாஜக கப்பல் மூழ்கப் போகுது !! அசோக் சவான் அதிரடி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Aug 2, 2019, 9:26 AM IST
Highlights

கட்சி மாறிய சந்தர்ப்பவாதிகளால் நிரம்பி வழியும் பாஜக  கப்பல் சீக்கிரமே மூழ்கும் என மகாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கிண்டல் செய்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. விரைவில் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளதால், அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு அணி மாறி வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் அண்மையில் பாஜகவில்  இணைந்து  அமைச்சரானார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று முன்தினம் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இந்தநிலையில், தொடர்ந்து தங்கள் கட்சியினரை இழுத்து வரும் பாஜகவை  மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கடுமையாக விமர்சித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நிரம்பி வழியும் கப்பல் என்னவாகும் மூழ்கிவிடும். 

அதுபோல தான் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை இழுத்துக்கொள்ளும் பாஜகவில் சந்தர்ப்பவாதிகள் நிரம்பி வழிகிறார்கள். அந்த பாஜக கப்பல் மூழ்கி விடும் என தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பவாதிகள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதால் காங்கிரசில் காலியிடம் ஏற்பட்டு உள்ளது. இதில் புது மற்றும் திறமை வாய்ந்தவர்கள் நிரப்பப்படுவார்கள்.
காங்கிரசின் உண்மையான பலம் தொண்டர்கள் தான். அது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களால் அல்ல என்றும் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

click me!