Bipin Rawat:தனது வியூகத்தால் சீன ராணுவத்தை பின்வாங்க வைத்த தளபதி.. கதறும் இந்திய தேசம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2021, 6:50 PM IST
Highlights

அனுபவமும் துணிவும் மிக்க இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் தனது வியூகத்தால் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா ராணுவத்தை பின்வாங்க வைத்த தீரர் என பலரும் அவரின் நினைவை பார்ட்டி வருகின்றனர். 

அனுபவமும் துணிவும் மிக்க இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் தனது வியூகத்தால் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா ராணுவத்தை பின்வாங்க வைத்த தீரர் என பலரும் அவரின் நினைவை பார்ட்டி வருகின்றனர். எதிர் பாராத விதமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, மனைவி மற்றும் சகவீரர்களுடன் அவர் மரணமடைந்துள்ள நிலையில் பலரும் அவரின் புகழை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் மட்டுமே சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனப்படும் துல்லிய தாக்குதல்கள் நடத்த முடியும் என இருந்த நிலையை மாற்றி இந்திய ராணுவத்தாலும் அதை செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியவர் பிபின் ராவத். ஜெனரல் பிபின் லட்சுமணன் சிங் ராவத்  முதல் தலைமுறை ராணுவ வீரர் அல்ல, அவரது தாத்தா அப்பா என்று எல்லோருமே இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இந்திய  ராணுவத்தில் ஆக்ரோஷத்துக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற கூர்க்கா ரெஜிமென்ட் லெஃப்டினன்ட் ஜெனரலாக பணிபுரிந்தவர் ராவத்தின் தந்தை. அவரைப் போலவே அதே படைப்பிரிவில் ராணுவ வீரராக பணியாற்றினார் பிபின் ராவத். தனது செயல் திறத்தால் சீனியர்  ஆபீஸர்களை பின்னுக்குத்தள்ளி பல பதவிகளில் முன்னேறினார் பிபின். பலரின் எதிர்ப்பையும் மீறி 2017 ஜனவரியில் இராணுவத்தளபதி ஆக்கினார் மோடி, காரணம் இந்திய எல்லையான சியாச்சின் காஷ்மீர் என எங்கெல்லாம் தீவிரவாதிகள் ஊடுருவல் நிகழ்த்துவார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இனக்குழு தீவிரவாதிகளின் வியூகங்களை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பிபின் ராவத் என்பதுதான் அதற்கு காரணம்.

அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் ராணுவத்திற்கு இணையாக இந்தியாவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் குழுவிற்கு தலைமை தாங்கி தன் தலைமையில் 2 சர்ஜிக்கல் ஸ்டைரைக் தாக்கதல் நடத்தி காட்டினார் பிபின். அப்போது 2015 இல் இந்திய ராணுவம் நாகாலாந்து தீவிரவாத அமைப்பான நாகா விடுதலைப் படையால் தாக்குதலுக்கு ஆளானது. அதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய அந்த தீவிரவாத குழு பின்னர் மியான்மர் நாட்டு காடுகளில் பதுங்கியது. சர்வதேச அளவில் இது இந்தியாவுக்கு பெரும் கவுரவப் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. பின்னர் ஒரு பிரத்தியேக குழுவை உருவாக்கி மியான்மர் காட்டுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி வெற்றிகரமாக அத் தீவிரவாதிகளை அழித்தார் பிபின் ராவத், அப்போது லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த பிபின்  நாகலாந்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அது பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதல் என பின்னர் தெரிந்தது.

அதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்று முடிவு செய்த இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தது. அப்போது இந்திய இராணுவத்தின் துணை தளபதியாக இருந்தார் பிபின், பின்னர் மிக துல்லியமாக திட்டமிட்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை கனகச்சிதமாக அழைத்தார் பிபின். இத் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்திய ராணுவத்தின் மீது பிரமிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதேபோல் சர்வதேச அளவில் ஐ.நா அமைதிகாக்கும் படையில் பங்கேற்று காங்கோவில் தீரத்துடன் செயல்பட்டு அங்கு அமைதியை நிலை நாட்டினர் பிபின், அதற்காக இரண்டு சர்வதேச விருதுகள் இந்திர ராணுவத்திற்கு கிடைத்தது. முன்னதாக 1962இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படையை சிறு குழுவை வைத்துக் கொண்டு விரட்டினார் பிபின் அப்போதிலிருந்து துணிச்சல் மிக்க வீரராக அறியப்பட்டார் அவர்.

அதே பிபின் ராவத் சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் ஊடுருவியபோது சீனாவை துணிச்சலுடன் எதிர்த்து நின்று இந்திய ராணுவத்தால் தீரத்துடன் போராட முடியும் என்பதை செய்து காண்பித்தார்.இந்தியாவின் அனுபவம் மிக்க படைத்தளபதியும், ராணுவ வியூகத்தை கற்றுத் தேர்ந்தவரும் தளமான உறுதியும் கொண்ட பிபின் ராவத் சீனாவை தனது வியூகத்தால் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து நாளடைவில் பின்வாங்க வைத்தார். சீனா இந்திய எல்லையில் அத்துமீறி படையை குவித்த நேரத்தில் பிபினும் இந்திய படைகளையும், போர்த்தளவாடங்களையும் கால்வான் பள்ளத்தாக்கை நோக்கி நகர்த்தினார். பிபின் தலைமையிலான இந்திய ராணுவத்தில் வழக்கத்திற்கு மாறான, பிடிவாதம், ஆக்ரோஷ நடவடிக்கைகளை பார்த்த சீனப்படை ஒரு கட்டத்தில் வெளவெளத்து போனது.  நாளைடைவில் மெல்ல வாலை சுருட்டிக் கொண்டு பின்வாங்கியது. இது 1962 இருந்த ராணுவம் அல்ல தொழில் நுட்பத்திலும், பலத்திலும் சீனாவுக்கு நிகரான ராணுவம் என்பதை தனது நடவடிக்கைகள் மூலம் சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தினார் பிபின். எனவே சீனா ராணுவத்திற்கு எதிராக பிபின் எடுத்த துணிச்சலான முடிவே சீனா பின்வாங்க காரணமாக இருந்தது. பிபின் ராவத் எதிரிநாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு இறுதிவரை சிம்ம செப்பனமாகவே இருந்து மறைந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 
 

click me!