பிறப்பிலேயே போராளி… போராட்ட நாயகன்… காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை பாராட்டிய கேரள முதலமைச்சர்!!

First Published Aug 2, 2018, 11:50 AM IST
Highlights
binarayee vijayan came to kavery and meet stalin


உடல் நலம் குன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வரும் திமுக  தலைவர்  கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கருயாநிதி ஒரு போராட்ட நாயகன் என்றும் அவர் பிறவியிலேயே போராள்ள என்றும் பாராட்டின்ர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தி.மு.க. தொண்டர்கள் கவலையும், பதற்றமும் அடைந்தனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு இரவு, பகல் பாராமல் காத்து இருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்கள் கலங்கிபோயினர். இந்தநிலையில் டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பார்த்த புகைப்படமும் வெளியானதையடுத்து காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கருணாநிதியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அவர் சிகிச்சை பெறும் அறைக்கே நேரில் சென்று பார்த்தனர்.

இதே போன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு சென்று, ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர்.

இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இன்று திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

பின்னர் அவர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் காவேரி மருத்துவமனை சென்று திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கருணாநிதியின் உடல் நலம் குறித்த ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவர்களது உறவினர்களிடம் விசாரித்ததாக தெரிவித்தார்.

கருணாநிதி பிறவியிலேயே போராளி என்றும் அவர் ஒரு போராட்ட நாயகன் என்றும் பாராட்டுத் தெரிவித்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

click me!