என்.ஆர்.சி.க்கு எதிராக பீகாரில் தீர்மானம்... பாஜக ஆதரவோடு ஆட்சி நடத்தும் நிதிஷ் அதிரடி!

Published : Feb 25, 2020, 10:48 PM IST
என்.ஆர்.சி.க்கு எதிராக பீகாரில் தீர்மானம்... பாஜக ஆதரவோடு ஆட்சி நடத்தும் நிதிஷ் அதிரடி!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது. பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், என்.ஆர்.சி-யை அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. 

பாஜக ஆதரவோடு ஆட்சி நடந்துவரும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் என்.ஆர்.சிக்கு எதிராத்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக பாஜக அரசுகள் அல்லாத மாநிலங்கள் வரிந்துகட்டியுள்ளன. இச்சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகார் மாநில சட்டப்பேரவையில் என்ஆர்சிக்கு எதிராக இன்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

 
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது. பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், என்.ஆர்.சி-யை அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மேலும், என்.பி.ஆர். திட்டத்தை 2010-ம் ஆண்டு சட்டப்படியே அமல்படுத்த வேண்டும் எனவும் பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் ஐக்கிய ஜனதாதளமே பீகாரில் என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..