விஜய் மட்டும் ஜாலியா தீபாவளி கொண்டாடணும், எங்க குடும்பங்கள் அழணுமா?: பிகில் பரிதாபங்கள்.

By Selvanayagam PFirst Published Oct 28, 2019, 10:47 AM IST
Highlights

விஜய் மட்டும் ஜாலியா தீபாவளி கொண்டாடணும், எங்க குடும்பங்கள் அழணுமா?:    பிகில் பரிதாபங்கள்.

சுர்ஜித்துக்காக நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள்  மட்டுமே. அஜாக்கிரதை, அலட்சியம், இவை இந்த  பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகளாகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க, கடும் தண்டனையே தீர்வு!
-    விவேக் (காமெடி நடிகர்)


*    தி.மு.க.வின் கூட்டணி தாவல்களை பட்டியலிட அறிக்கை போதாது! தொடர்கதைதான் எழுத வேண்டும். கூட்டணி வழியே கிடைக்கும் பதவிகள் பிச்சை என்றால், 2006-ல் தி.மு.க.வுக்கு கிடைத்த நாற்காலியானது பா.ம.க. போட்ட பிச்சைதான். ஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவியும், பா.ம.க. போட்ட பிச்சை. ஒன்று மட்டும் உறுதி. ஸ்டாலினுக்கு அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது. அவர் திருந்தமாட்டார். 
-    ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

*    தினகரன் தனது அ.ம.மு.க. கட்சி கொடியில் ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் அவரது சித்தி சசிகலாவின் படத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும். அவர் பெயரை போட்டு கட்சி ஆரம்பிக்கட்டும். நாங்கள் எதிர்க்க மாட்டோம்.
-    ஜெயக்குமார் (தமிழக அமைச்சர்)

*    மீண்டும் ‘திருமங்கலம் ஃபார்மூலா’ ஸ்டைல் தேர்தல் முடிவு இது. ஆட்சி மாறியதால் கட்சி மாறி இருக்கிறது அவ்வளவுதான். இன்று பணத்திற்காக மாறி ஓட்டுப் போட்டவர்கள், 2021-ல் மனம் மாறி, நேர்மைக்காக ஓட்டுப் போடுவார்கள் என நம்புவோம்
-    மக்கள் நீதி மய்யம்

*    சசிகலா சிறைக்குப் போகும் முன் தினகரனிடம் கட்சியை விட்டுச் சென்றார். அந்த கட்சியின் இப்போதைய  நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதே போல இ.பி.எஸ்.ஸிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தார். ஆட்சிக்கு ஆபத்தில்லாமல் வீறு நடை போட்டு வருகிறார் என்பதையும் பாருங்கள். 
-    பெங்களூரு புகழேந்தி 

*    தமிழ் சினிமா இப்போது சிரமத்தில் உள்ளது. நல்ல சினிமா படங்களை தியேட்டர் நிர்வாகங்கள் ஒன்றிரண்டு நாட்களில் எடுத்து விடுகின்றன. சிறிய பட்ஜெட் படங்கள், நன்றாக இருந்தாலும் போட்டியின்றி வெற்றி பெற முடியவில்லை. சிறிய பட்ஜெட் படங்களை குறைந்தது ஐந்து நாட்களாவது தியேட்டர்கள் திரையிட வேண்டும்.
-    ராதாரவி (நடிகர்)

 

*    இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் வெற்றி பெறுவது காலம் காலமாக தமிழகத்தில் நடக்கும் இயல்பான ஒன்றுதான். வெற்றிக்காக ஆளும் கட்சி கையாளும் தந்திரங்களை, தேர்தல் கமிஷனே பல முறை கண்டித்துள்ளது. மக்களின் ஆதரவால் இந்த வெற்றி கிட்டவில்லை. பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமும் இது இல்லை.
-    திருமாவளவன் (சிதம்பரம் எம்.பி)

*    லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணி, இனிமேல் தங்களை அசைக்க யாரும் இல்லை எனும் நினைப்பில், கற்பனை கோட்டை கட்டினர். தேர்தல் முடிவுகள் அவர்களின் கனவை நனவாக்காமல் செய்துள்ளன. 
-    வானதி சீனிவாசன் (தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர்)

*    இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி, மறைந்த ஜெயலலிதாவின் சாதனைக்கு கிடைத்த வெற்றி. எங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதை இது உறுதி செய்துள்ளது. தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை தந்துள்ளனர். 
-    ஓ.பன்னீர் செல்வம் (தமிழக முதல்வர்)

*    கிருஷ்ணகிரியில்  பிகில் பட ரிலீஸ் தாமதத்தினால் பிரச்னை செய்து, கைதாகி, சிறை சென்ற  இளைஞர்களின் பெற்றோர் புலம்புகிறார்கள். ‘படம் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் மகிழ்ச்சியாக, தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடுவார். அவருக்காக பணத்தை கொட்டி படம் பார்க்க சென்று, ஆர்வத்தில் ரகளை செய்து சிக்கிய ரசிகர்களின் குடும்பத்தினர் துயரம் அனுபவிக்கிறோம்.’ என்று பொங்குகின்றனர். 

click me!