பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி.! வேற லெவல் வெற்றி தான் !!

By Raghupati RFirst Published Dec 5, 2022, 7:18 PM IST
Highlights

டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 69-91 வார்டுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வெறும் 3 முதல் 7 வார்டுகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் வாக்குப்பதிவுடன், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் 25 வார்டுகளில் 21-ஐ ஆம் ஆத்மி பிடிக்க வாய்ப்புள்ளது என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

இதற்கிடையில், மீதமுள்ள 4 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் இங்கு ஒரு இடத்தைக் கூட பிடிக்காது என்று தெரிய வந்துள்ளது.  ஆம் ஆத்மி வடகிழக்கு டெல்லியில் 41 இடங்களில் 17 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாஜக இங்கு 21 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா டுடே:

பாஜக: 69-91

ஆம் ஆத்மி: 149-171

காங்கிரஸ்: 3-7

மற்றவை: 5-9

 

டைம்ஸ் நவ்:

பாஜக: 84-94

ஆம் ஆத்மி: 146-156

காங்கிரஸ்: 6-10

 

நியூஸ் எக்ஸ்:

பாஜக: 70-92

ஆம் ஆத்மி: 159-175

காங்கிரஸ்: 04-07

இதையும் படிங்க..இமாச்சலபிரதேசத்தில் 37 வருட சாதனையை உடைக்கும் பாஜக! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன ?

click me!