ரஜினி இங்கே பொழைக்க வந்தவர்! தமிழரில்லை: மீண்டும் அருவா தூக்கிய வி.ஐ.பி! யார்?

By Vishnu PriyaFirst Published Feb 6, 2020, 12:48 PM IST
Highlights

வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆள்வதை நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அதேபோல, ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நான் ஒரு தமிழ்நாட்டுக்காரன்’ என்று ரஜினி சொன்னாலும் கூட, அவர் இங்கே வாழ வந்தவர்தான். தமிழர் இல்லை. 
-    பாரதிராஜா (இயக்குநர்)

*    முஸ்லிம்கள் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து, அரசின் கருத்து அல்ல. சிறைக்கு சென்றவர், சொற்பொழிவாளர், பேச்சாளர் என பல பட்டங்களை உதயநிதிக்கு தரலாம். அவரை முன்னிலைப்படுத்திட தானே தி.மு.க. பல போராட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது. 
- ஜெயக்குமார் (தமிழக அமைச்சர்)

*    திராவிட இனவாதம் பேசி வருவோர், கற்பனையான பிரிவினைகளையும், வேற்றுமைகளையும் வளர்த்து வருகின்றனர். இவர்கள், ஒட்டுமொத்த தமிழர்களின் நலனில் அக்கறையுடையவர்கள் அல்ல. ஜாதிவாதம் பேசி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க துடிக்கும் சுயநலவாதிகள். 
-    ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலர்)

*    கலெக்‌ஷன், கமிஷன், கரெப்ஷன் ஆகிய மூன்றுக்கும் மட்டுமே தமிழக அரசு செயல்படுகிறது. முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடியின் எடுபிடியாகவே செயல்படுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியானது வெறும் இடைவேளைதான். சட்டசபை தேர்தலில்தான் கிளைமேக்ஸ் உள்ளது. 
-    உதயநிதி (தி.மு.க. இளைஞரணி செயலாளர்)

*    அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேறும் வரையில், ஒன்றுக்கு மேல் வீடு வாங்குவதை ஏன் கட்டுப்படுத்தக் கூடாது? அவ்வாறு வாங்குபவர்களுக்கு பத்திர பதிவின்போது நூறு சதவீதம் முத்திரைத்தாள் கட்டணத்தை ஏன் விதிக்க கூடாது? சொத்து வரி, மின்சாரம், தண்ணீர் , கழிவு நீர் இணைப்பு கட்டணத்தை கூடுதலாக செலுத்த ஏன் நிபந்தனை விதிக்க கூடாது?
-    சென்னை உயர்நீதிமன்றம் 


*    தினகரன் துவக்கியுள்ள அ.ம.மு.க.வால் அ.தி.மு.க. அல்லது தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட முடியாது. எல்லா வகையிலும் தமிழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது. 2021 சட்டசபை தேர்தலில் அக்கட்சிதான் வெற்றி பெறும். 
-    திவாகரன் (அண்ணா திராவிடர் கழக தலைவர்)

*    மத்திய அரசின் பட்ஜெட் வழக்கம்போல் பா.ஜ.க.வின் குருபீடம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில்தான் உள்ளது. எனினும் குருபீடத்தின் மீதான விசுவாசத்தை மறைத்து, நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல்வது போல நீலிக்கண்ணீர் வடிக்கிறது. 
-    இரா.முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

*    மனிதனாக பிறந்த ஒருவன், அவன் வாழ்கின்ற வாழ்க்கையையும், பிறந்ததன் பலனையும் அடைய வேண்டுமென்றால், இறை என்னும் ஆனந்தத்தை தரிசிக்க கூடிய தன்மை மிக்கவராக, வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். 
-    மகாதேவன் (நீதிபதி)

*    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை தேச விரோதிகள் என பா.ஜ.க. தலைவர்கள் விமர்சிக்கின்றனர். போராட்டம் நடத்துபவர்களை பயங்கரவாதிகளாக  முத்திரை குத்திட முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடி ‘நான் இந்த நாட்டின் காவலாளி’ என தேர்தல் நேரங்களில் மட்டும் முழங்குகிறார். மற்ற நேரங்களில் மக்களை பொருட்படுத்துவது இல்லை. 
-    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

*    பா.ஜ.க.வை கடுமையாக விமர்சிக்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இப்போது அனுமன் மந்திரத்தை சொல்ல துவங்கியுள்ளார். இதை அவரே கூறியுள்ளார். வரும் காலத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசியும் இந்த மந்திரத்தை சொல்லும் நேரம் வரும். நிச்சயம் அது நடக்கும். 
-    யோகி ஆதித்யநாத் (உ.பி.முதல்வர்)
*    வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆள்வதை நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அதேபோல, ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நான் ஒரு தமிழ்நாட்டுக்காரன்’ என்று ரஜினி சொன்னாலும் கூட, அவர் இங்கே வாழ வந்தவர்தான். தமிழர் இல்லை. 
-    பாரதிராஜா (இயக்குநர்)

click me!