அமிதாப்பச்சனை மீறிக்கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்!:கன்னாபின்னான்னு நம்பிக்கை வைக்கும் ராமகிருஷ்ணன்

By Vishnu PriyaFirst Published Feb 6, 2020, 12:37 PM IST
Highlights

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஜி மாநில தலைவரும், தற்போதைய பொலீட் பீரோ உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தங்கள் கட்சியின் தற்போதைய நிலை, ரஜினியின் அரசியல் பற்றி பூசி மெழுகி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் இப்படி....

இன்றைய தேதிக்கு தேசிய அரசியலில் அநியாயத்துக்கு அடிவாங்கிய கட்சி என்றால் அது ‘கம்யூனிஸ்ட் இயக்கங்கள்’ தான். இப்படி அப்படி இல்லை, செம்ம மாத்து வாங்கியிருக்கிறார்கள் தேசம் முழுக்க. வெகுவே வெகு சில  மாநிலங்களைத் தவிர, ஒட்டுமொத்த இந்தியாவிலும் அந்தந்த பிராந்தியத்தில் எவை பெரிய கட்சிகளாக இருக்கின்றனவோ அதன்  கையைப் பிடித்து தொங்கிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பாவம். அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் ஒட்டிக் கொண்டுள்ளன இரு கம்யூனிஸ இயக்கங்களும். விளைவு தலா இரண்டு என நான்கு எம்.பி.க்களும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணியை தொடர்ந்தவர்கள், இதோ சட்டமன்ற தேர்தலிலும் அதற்கே அடிபோட்டுக் காத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஜி மாநில தலைவரும், தற்போதைய பொலீட் பீரோ உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தங்கள் கட்சியின் தற்போதைய நிலை, ரஜினியின் அரசியல் பற்றி பூசி மெழுகி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் இப்படி....”தேசமெங்கிலும் எங்களுக்கு சரிவு என்றெல்லாம் சொல்ல முடியாது. இதோ கேரளத்தை சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் நாங்கள் அதிகம் வென்றிருக்க வேண்டும். ஆனால் எங்களையும் எதிர்த்து நின்ற காங்கிரஸோ ‘இடது சாரிகளை நீங்கள் வெற்றி பெற வைத்தாலும், அவர்கள் ஜெயித்து எங்களைத்தானே ஆதரிக்கணும். எனவே எங்களுக்கே நேரடியாக வாக்களியுங்கள். நல்லது பண்ணுகிறோம்’ என்று புது பிரசாரம் செய்து வெற்றி பெற்றனர். எனவே எங்களுக்கு சரிவில்லை. 

என்னை பொறுத்தவரையில், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கருதவில்லை. தன்னுடைய பிறந்தநாளன்று கூட மீடியாவிடம் ’அமிதாப்பச்சன் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். அப்போது அரசியலுக்கு போகாதீங்க!ன்னும் ஒரு அட்வைஸ் சொன்னார்!’ என்றார். இதை மீடியாவிடம் ரஜினி சொல்லியிருக்க வேண்டிய அவசியம் என்ன? தனக்கும், தன் நெருங்கிய நண்பர்களுக்கும் தான் அரசியலில் குதிப்பதில் ஈடுபாடில்லை! என்று பொதுவெளியில் பதிவு செய்யும் செயல்தானே அது. இருந்தாலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினிகாந்தும் வரலாம். ஒருவேளை அவர் வந்தாலும் கூட பெரிய தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்த மாட்டார்.” என்று சொல்லியுள்ளார். ஈயம் பூசுன மாதிரியுமில்லாம, பூசாத மாதிரியுமில்லாம நீங்க பேசியிருக்குறது மூலமா ஒண்ணு புரியுது. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்து, அவர் கட்சிக்கு அமோக ஆதரவு உருவானால், கொஞ்சம் கூட கவலையே படாமல் கம்யூனிஸ்டுகள் ‘தோழர் ரஜினி அவர்களே!’ன்னு கூட்டணிக்கு போக தயங்கமாட்டீங்க.

click me!