'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

Published : Feb 06, 2020, 11:52 AM ISTUpdated : Feb 06, 2020, 12:51 PM IST
'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

சுருக்கம்

"டேய் வாடா.. செருப்பை கழட்டுடா" என அமைச்சர் சிறுவனை அனைவர் முன்னிலையிலும் அழைத்தார். சிறுவனும் செருப்பை அமைச்சரின் காலில் இருந்து கழட்டியிருக்கிறான்.

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும்  முதுமலையில் யானைகள் நல்வாழ்வு முகாம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், கட்சியினர் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

அப்போது அமைச்சர் சீனிவாசனின் கால் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொல்லியிருக்கிறார். "டேய் வாடா.. செருப்பை கழட்டுடா" என அமைச்சர் சிறுவனை அனைவர் முன்னிலையிலும் அழைத்தார். சிறுவனும் செருப்பை அமைச்சரின் காலில் இருந்து கழட்டியிருக்கிறான். இதை அங்கிருந்த ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்தன. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி அனைவரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.

அமைச்சர் ஒருவரே இவ்வாறு செய்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இனி எல்லா கோவில்களிலும் தமிழில் தான் நடக்கணும்..! அதிரடி காட்டும் திருமா..!.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!