அடுத்தது இந்த கம்பெனிதான் !! தனியார் கைக்கு போகும் பாரத் பெட்ரோலியம் !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2019, 10:14 PM IST
Highlights

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

அண்மைக்காலமாக மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறது.  எல்ஐசி, சேலம் உருக்காலை உள்ளிட்ட பல மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் தனியர் மயமாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது பாரத் பெட்ரோலியத்தையும் (பிபிசிஎல்) தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் இந்தியா முழுவதும் நான்கு இடங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களையும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் மையங்களையும் கொண்டுள்ளன.

தற்போது பாரத் பெட்ரோலியத்தின் உலகலாவிய சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 53 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு மக்களைவையில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அரசு அதற்கான ஆலோசனைகளில் இருப்பதாக தெரிகிறது. அரபு எண்ணெய் நிறுவனங்கள் சில இந்த பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு 50 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

click me!