தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... குற்றத்தின் ஆட்சியா..? முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி?

Published : Sep 30, 2019, 10:10 PM IST
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... குற்றத்தின் ஆட்சியா..? முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி?

சுருக்கம்

லாரியைப் பிடித்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பிரமுகர்கள், முதல்வரின் பெயரை சொல்லி போலீஸாரை மிரட்டியதாக தகவல் வெளியானது. மேலும் லாரிகளைப் பிடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.   

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலக்கோட்டையூரில் உள்ள குளத்தில் முறைகேடாக மண் அள்ளப்பட்டபோது  மூன்று லாரிகளை பிடித்து தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், லாரியைப் பிடித்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பிரமுகர்கள், முதல்வரின் பெயரை சொல்லி போலீஸாரை மிரட்டியதாக தகவல் வெளியானது. மேலும் லாரிகளைப் பிடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

 
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்துல் அதிமுக ஆட்சியைக் கடுமையாகத் தாக்கி ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டார். அதில், “இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதல்வர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? ஆட்சி - எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!