
மத்திய பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மத்திய பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்பில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக நியமிப்பதாக கூறியுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன், 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.