அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட முதல் ‘செக்’… ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிஜிஆர்

By manimegalai aFirst Published Oct 27, 2021, 8:08 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மின்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கும், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும் இடையேயான அறிக்கை போர் உச்சக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. மின்துறை ஊழல், கமிஷன், முறைகேடு என்று தொடர்ந்து அண்ணாமலை, செந்தில் பாலாஜி  மீது போட்டு தாக்க தமிழக அரசியல் களம் சூடானது.

பிஜிஆர் என்ற நிறுவனத்துக்கு மின்வாரியம் பல சலுகைகளை வழங்கி ஊழலுக்கு வழிவகுத்து உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி என்பது அண்ணாமலையில் பிரத்யேக குற்றச்சாட்டு.

விரைவில் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட போவதாக அண்ணாமலை கூறி இருந்தார். அதற்கு பதிலடி தந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்தும் ஆதாரமற்றவை, இருப்பை காட்டிக் கொள்ள ஏதேதோ  பேசுகிறார் என்று போட்டு தாக்கினார்.

இந் நிலையில் பிஜிஆர் நிறுவனம் அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இன்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த நோட்டீசுக்கு அண்ணாமலை அளித்துள்ள பதில் தான் விசேஷம். சாதாரண விவசாயியிடம் இருப்பது சில ஆடுகள் தான். திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து கொடுக்க எதுவுமில்லை என்று திருப்பி அடித்து இருக்கிறார் அண்ணாமலை. ஆக மொத்தம் இந்த விவகாரம் இப்போதைக்கு முடியாது என்றே தோன்றுகிறது.

Sir. You have sued me for 500 Crore!

Im a simple farmer with a couple of sheep’s in my farm & not worth that much like ’s corrupt ministers for whom corruption-commission-cut money has become a way of life!

I fully trust our judiciary!

Pls proceed 🙏 pic.twitter.com/JWqHNpqGzF

— K.Annamalai (@annamalai_k)
click me!