சொன்ன நம்மளே இப்படி செய்யலாமா? திமுகவினருக்கு அறிவுரை வழங்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 4:17 PM IST
Highlights

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுதான் முதல்வர் கூறியுள்ளார்; இதுகுறித்த முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்கவுள்ளது, பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் எனறார். 

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;- செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுதான் முதல்வர் கூறியுள்ளார்; இதுகுறித்த முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்கவுள்ளது, பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் எனறார். 

கட்- அவுட், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான். போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு, திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்ற கூடாது என்று கிடையாது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு மிக மிக குறைவாக தான் தேர்வு எழுத உள்ளனர். இதற்கு காரணம் கொரோனோ மற்றும் பள்ளிகள் இல்லாதது. நம்மை பொருத்தவரை நீட்டில் இருந்து விலக்கு பெறுவதே அரசின் நோக்கம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

click me!