இந்த நிலைப்பாட்டில் உறுதியா இருங்க... எடப்பாடி அரசுக்கு பாமக ராமதாஸ் அறிவுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Jan 25, 2020, 11:31 AM IST
Highlights

பா.ம.க.வின் நிலைப்பாட்டை அரசு ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது. இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

பா.ம.க.வின் நிலைப்பாட்டை அரசு ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது. இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் கீழப்பழுவூர் சின்னசாமி 56 ஆண்டுகளுக்கு முன் பற்ற வைத்த நெருப்பு தான்  தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது. இந்தியை விரட்டியடித்தது. மொழிப்போர் தியாகிகளின் ஈகத்தைப் போற்றுவோம். தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்ப்போம். தமிழை வளர்ப்போம்.

சீனாவின் வூகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது நல்லதா, அங்கேயே பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நல்லதா? என்பதை அவர்களின்  விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும்.

சீனாவில் கொரோனாவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

தனியார் மருத்துவக்கல்லூரிகளுடன் அரசு மருத்துவமனைகளை இணைக்கும் மத்திய அரசின் யோசனையை தமிழக அரசு ஏற்காது என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.  இதுகுறித்த பா.ம.க.வின் நிலைப்பாட்டை அரசு ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது. இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

click me!