பாஜகவிடம் உஷாராக இருங்கள்...!! திமுக எம்பிக்களுக்கு திடீர் எச்சரிக்கை விட்ட ஸ்டாலின்...!!

By Asianet TamilFirst Published Aug 30, 2019, 12:42 PM IST
Highlights

உங்களின் நடவடிக்கையால் கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளர். மீறி நடந்துகொள்பவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இக்கட்டுப்பாடுகளை கேட்டு திமுக எம்பிக்கள் தலைமை மீது உச்சகட்ட கடுப்பில் உள்ளனராம்.
 

திமுக எம்பிக்கள் யாரும் தங்கள் பதவியை பயன்படுத்தி மத்திய அரசிடன் ஆதாயம் தேடும் முயற்ச்சியில் ஈடுபடக்கூடாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிரடியாக கட்டுப்பாடு விதித்துள்ளார். அப்படி ஏதாவது புகார் வந்தால் உடனே அவர்களின் மீது  கட்சி ரீதியாக நடவடக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கண்டிப்பு காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சமீபகாலமாக திமுக மற்றும் பாஜகவிடையே எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வார்த்தைப்போர் நடைபெற்றுவருகிறது. சில நேரங்களில் ஒருவரை மாற்றி யொருவர் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் அதிமுகவைக் காட்டிலும் பாஜகவையே  தன்னுடைய  நேர் எதிரியாக திமுக கருதுகிறது.  இந்த நிலையில்  சென்னை அறிவாலயத்தில்  திமுக தலைவர் மி.க ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராஜா, திருச்சி சிவா, தயாநிதி மாறன்  உள்ளிட்ட  முக்கிய எம்பிக்கள் கலந்துகொண்டனர்,  அப்போது முக ஸ்டாலின் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதில் முன்னபைவிட திமுகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அத்தனை தொகுதிகளில் வெற்றியை வழங்கியுள்ளனர், தற்போதுள்ள வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றால் மக்களுக்கு அனுசரனையாக திமுக நடந்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற உருப்பினர்கள் உடனடியாக தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தவேண்டும், மக்கள் கூறும் தொகுதி பிரச்சனைகளை  உடனுக்குடன்  தீர்க்கும் நடவடிக்கையில்  இறங்க வேண்டும் , அப்படி மாதாந்தோறும் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளுக்கு எம்பிக்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை என்னிடம் சமர்பிக்க வேண்டும், என்று  எம்பிக்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் எம்பி பதவியைக் காட்டி மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடும் வேலைகளை செய்ய வேண்டாம், அப்படி செய்யும் பட்டசத்தில் பாஜக அதை வைத்து அரசியல் செய்ய வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்துள்ளார். உங்களின் நடவடிக்கையால் கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளர். மீறி நடந்துகொள்பவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இக்கட்டுப்பாடுகளை கேட்டு திமுக எம்பிக்கள் தலைமை மீது உச்சகட்ட கடுப்பில் உள்ளனராம்.

click me!