நடிகர் விஜய் குடும்பத்தில் போர்க்களம்... பகீர் ரகசியத்தை போட்டுடைத்த தாய் ஷோபா..!

Published : Nov 07, 2020, 10:38 AM IST
நடிகர் விஜய் குடும்பத்தில் போர்க்களம்... பகீர் ரகசியத்தை போட்டுடைத்த  தாய் ஷோபா..!

சுருக்கம்

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், ’’அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் விலகிட்டேன்’’எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!