விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கல.. அந்தர் பல்டி அடிக்கும் விஜய் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர்..!

By T BalamurukanFirst Published Nov 7, 2020, 8:32 AM IST
Highlights

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது என்றும் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார் என்றும் தகவல்கள் வெளியானது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் என குறிப்பிட்ட புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 
 
விஜய் அப்பா சந்திரசேகர் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறார். அவர்கள் குடும்பத்திற்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. விஜய் அம்மா விஜய்க்கு ஆதராவாக உள்ளார் என்றெல்லாம் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஏ சந்திரசேகர், “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சிதான், விஜயின் அரசியல் கட்சி அல்ல. விஜய்க்கும் அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என விளக்கமளித்தார். ஆனால் நடிகர் விஜய், தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் பெயரில் 1993 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஒரு அமைப்பு இது. ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, பின்பு நற்பணி மன்றமாக மாறியது. அதில் உள்ள தொண்டர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பதிவுசெய்தேன். ஆனால் விஜய் கூறியதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள். நான் என்ன நோக்கத்தில் கட்சியை பதிவு செய்தேன் என்பதை தனித்தனியாக என்னை பேட்டி எடுங்கள். அப்போது உங்களுக்கு சொல்கிறேன். நல்லது நினைத்து ஆரம்பித்தோம். நல்லது நடக்கும்” எனக் கூறினார்.

click me!