ஊரடங்கிலும் நீதிமன்றத்துக்கு சென்ற திமுக... தமிழக அரசுக்கு எதிராக வழக்கு...!

By vinoth kumarFirst Published Apr 13, 2020, 11:45 AM IST
Highlights

தமிழக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் தரலாம். 

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, நிவாரண பொருட்கள் வழங்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், தடை உத்தரவு காரணமாக வேலைக்கு செல்லாமல் பொருளாதார ரீதியாக  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், நேற்று தமிழக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் தரலாம். மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டது. தமிழக அரசின் மனிதநேயமற்ற செயலுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பதிவாளர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இன்று அல்லது நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!