பெண் பத்திரிக்கையாளர்களை தவறாக பேசிய விவகாரம் !! பாஜக அலுவலகத்துக்குள் எஸ்.வி.சேகர் நுழைய தடை… தடாலடி தமிழிசை!!

By Selvanayagam PFirst Published Feb 5, 2019, 8:24 AM IST
Highlights

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து ஆபாசமா முகநூலில் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்துக்குள் கால் வைக்கக்கூடாது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தண்டனை' கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழக பாஜகவுக்கு தலைவராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத எஸ்.வி.சேகர் போன்றோர் அவரை எப்படியாவது அந்த பதவியில் இருந்து தூக்கிவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் சிலர்   பிரதமர் நரேந்திர மோடி வரை தொடர்புடையவர்கள் என்றாலும்  தமிழிசையை யாராலும் அசைக்க முடியவில்லை.

இதனிடையே அண்மையில் மதுரையில் நடைபெற்ற பாஜக விழாவில் தமிழிசையின் பேச்சு பிரதமர் மோடியை மிகவும் கவர்ந்ததாகவும், அது குறித்து மோடி பாராட்டுத் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இதை தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதையடுத்து  தமிழிசை மீது அவரின் எதிர் கோஷ்டியினருக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில்தான், சென்னை, திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக பிரமுகர், எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைமை என்னை, கட்சி அலுவலகத்தில் கூட விட மறுக்கிறது, என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறும்போது, அது உண்மைதான் என்றும் பெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சனம் செய்யும் வகையிலான ஒரு பேஸ்புக் போஸ்ட்டை எஸ்.வி.சேகர் ஷேர் செய்திருந்தார்.

பிறகு அதற்கு எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தாலும், காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை மனதில் வைத்து, எஸ்.வி.சேகருக்கு பாஜக தலைவர் என்ற முறையில் இந்த தண்டனையை தமிழிசை கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

click me!