பீப் பிரியாணிக்கு மட்டும் தடையா.? தடை செய்ய அதிகாரம் கொடுத்தது யார்.? கொந்தளிக்கும் பா. ரஞ்சித்தின் அமைப்பு!

Published : May 13, 2022, 08:13 AM IST
பீப் பிரியாணிக்கு மட்டும் தடையா.? தடை செய்ய அதிகாரம் கொடுத்தது யார்.? கொந்தளிக்கும் பா. ரஞ்சித்தின் அமைப்பு!

சுருக்கம்

"பீப் பிரியாணியை மட்டும் தடை செய்து மீதமுள்ள 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடை அமைக்கப்படும் என்று கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது" என்று பதிவிடப்பட்டுள்ளது.  

ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருப்பதை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டித்துள்ளது.

பிரியாணிக்கு புகழ்பெற்ற ஊராக ஆம்பூர் திகழ்ந்து வருகிறது. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆம்பூரில் 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை முடிவெடுத்தது. பிரியாணி திருவிழா தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா, “இந்திய அளவில் ஆம்பூர் பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. ஆம்பூர் பிரியாணியை அப்படிச் சொல்வது மிகையாகாது. இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த ஆம்பூர் பிரியாணியின் சுவையின் சிறப்பை வெளிப்படுத்த ஆம்பூரில் 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பீப் பிரியாணி மட்டும் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த முடிவுக்கு விசிக, இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான நீலம் பண்பாட்டு மையமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாகப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் பிரியாணி திருவிழா நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்துள்ளது. பீப் பிரியாணியை மட்டும் தடை செய்து மீதமுள்ள 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடை அமைக்கப்படும் என்று கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் #பீப்_பிரியாணி மட்டும் வேண்டாம் எனக் ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிப்போம்! #பீப்_பிரியாணியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று அதிகாரம் யார் கொடுத்தது. அரசு இப்போக்கை தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!