
கலாச்சாரத்தை மாற்ற திமுக நடவடிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டது.இதனையடுத்து ராஜபக்சே ரகசிய இடத்தில் தலைமைறைவாக உள்ளார். இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை தமிழகத்திலும் ஏற்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தை மாற்ற தமிழக அரசு முயற்ச்சி மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். திமுக அரசு பதவியேற்றதும் இரண்டு மிகப்பெரிய சாதனையை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதில் ஒன்று மத்திய அரசு திட்டங்கள் மேல் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக தெரிவித்தார்.
திமுகவிற்கு மன வியாதி
இரண்டாவது எங்கே பார்த்தாலும் ஊர் பெயரை மாற்றுவது, பெயரை மாற்றி புதிய பெயரை வைப்பது, சென்னையில் உள்ள ஈசிஆர் சாலைக்கு கலைஞர் பெயரை சூட்டியுள்ளார். திருவாரூரில் கூட ஒரு சாலைக்கு கலைஞர் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்த மன வியாதி குடும்ப அரசியலை ஆட்சி செய்பவர்களுக்கு உருவாகும் என கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு 70 வருடங்களாக இந்த நிலை உள்ளதாகவும் கூறினார். உயிரோடு இருக்கும் போதே அவர்கள் பெயரை வைத்துக்கொள்கின்றனர். ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் தங்கள் பெயரை திட்டங்களுக்கு சூட்டியுள்ளனர். இந்த வியாதி திமுவிற்கும் ஏற்பட்டுள்ளது. உலக கட்சிக்கே குடும்ப கட்சியாக முன் மாதியாக திமுக உள்ளதாக குறிப்பிட்டார். பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்த தெருக்களுக்கு சாலை வைத்து கருணாநிதி பெயரை வையுங்கள் எனவும் அண்ணாமலை கூறினார்.
2024-ல் குடும்ப ஆட்சிக்கு முடிவு
ஜாதியை பார்த்து ஒவ்வொருவர் வீட்டிற்காக சென்று உணவருந்தி புகைப்படத்தை ஸ்டாலின்பதிவிடுகிறார். முதலமைச்சராக பதவியேற்று ஒரு வருடம் ஆகியுள்ளது. மாற்று ஜாதியினரை முதலமைச்சர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு கொடுத்தாரா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் இந்து தர்மத்தை எதிர்த்து தமிழக கலாச்சாரத்தை எதிர்த்து கோயில்கள் இடிக்கப்படுவதாக கூறினார். இலங்கையில் ஏற்பட்ட நிலை தமிழகத்தில் ஏற்புடும் என கூறினார். இலங்கையில் ஏற்பட்டு தற்போது முடிந்துள்ளது குடும்ப ஆட்சி, பாஜக குடும்ப ஆட்சியை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024ல் அறிவாலய குடும்பம், கேசிஆர் குடும்பம், கேடிஆர், சரத்பவார் குடும்பம் ஆகிய குடும்ப ஆட்சியை ஒழிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு கோபாலபுர குடும்பத்திற்கு முடிவுரை எழுதப்படும் எனவும் தெரிவி்த்தார். 2024 ஆம் தேர்தல் தான் கோபாலபுர குடும்பத்தின் கடைசி தேர்தல் எனவும் அண்ணாமலை அப்போது கூறினார்.
இதையும் படியுங்கள்