வாக்கு பெட்டி வைக்கும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.. தமிழக தேர்தல் ஆணையத்தில் கதறிய அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2021, 4:21 PM IST
Highlights

என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இடம் அவர் வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக சார்பில் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையங்களை மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து 24  மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட  வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: முந்திரி தொழிற்சாலை கொலை.. வசமாக சிக்கிய திமுக எம்.பி.. உச்சகட்ட டென்ஷனில் அறிவாலயம்.

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார், அதில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையங்களை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து கண்காணிக்க வேண்டும் , அதேபோல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, அந்தக் காட்சிகளை பெரிய திரையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்க.. பிச்சு உதறப்போகுதாம்.

என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இடம் அவர் வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக சார்பில் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அதற்கான சான்றுகளை உடனுக்குடன்  தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கொடுத்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். 
 

click me!