சில அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டும் காணமுடிகிறது.இது மாறவேண்டும். அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை.

By Ezhilarasan Babu  |  First Published Oct 9, 2021, 2:34 PM IST

அதற்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1206 திருக்கோயில்கள் உள்ளன.


சில கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டும் அவர்களை காண முடிகிறது மற்ற நாட்களில் ஒரு உதவியாளரை பணியில் அமர்த்திக் கொள்கின்றனர், இதுபோன்ற நிலை முற்றிலும் மாற வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில், கோயில் சம்பந்தப்பட்ட சொத்து விவரம் வருவாய் வாடகை நிலுவைத்தொகை, பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உட்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெயர்ப்பலகை, வெளிப்படைத்தன்மையுடன் வைக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட திருக்கோயில்களில் மேம்பாடு குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்க.. பிச்சு உதறப்போகுதாம்.

அதற்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1206 திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக் கோயில்களில் திருப்பணி, திருத்தேர், திருத்தலம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும் குறைந்தது 20 திருக்கோயில்கள், பொறுப்பு அலுவலர்களாக பணியில் உள்ளனர். அந்த பொறுப்பு அலுவலர்கள் ஒரு நாளைக்கு ஒரு கோயில் வீதம் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் திருக்கோயில்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்து சமய  அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில், பணியாளர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும்.

இதையும் படியுங்கள்: முந்திரி தொழிற்சாலை கொலை.. வசமாக சிக்கிய திமுக எம்.பி.. உச்சகட்ட டென்ஷனில் அறிவாலயம்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில் கோயில் சம்பந்தப்பட்ட சொத்து விவரம், வருவாய், வாடகை, நிலுவைத்தொகை, பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உட்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெயர் பலகை, வெளி தன்மையுடன் வைக்கப்பட வேண்டும். சில கோயில்களின் பணியாற்றும் அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டுத்தான் காணமுடிகிறது, மற்ற நாட்களில் ஒரு உதவியாளரை பணியில் அமர்த்திக் கொள்கின்றனர். இதுபோன்ற நிலை மாறவேண்டும். குடமுழுக்கு நடைபெற தயாராக உள்ள திருக்கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
 

click me!