வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்! மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவில் காவல்நிலையத்தில் கையெழுத்திட கையெழுத்து போடணும்!

Asianet News Tamil  
Published : Jun 18, 2018, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்! மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவில்  காவல்நிலையத்தில் கையெழுத்திட கையெழுத்து போடணும்!

சுருக்கம்

bail tollgate case for velmurugan

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரிய நிலையில், நெய்வேலியில் போராட்டம் நடத்தியபோது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளுக்காக ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரண்டு முறை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

இந்த நிலையில் இன்று ஜாமீன் கோரிய வழக்கு மீண்டும் விசாணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரே பொய் பொய்யா எழுதி கொடுப்பீங்க, நான் வாசிக்கனுமா..? உரையை புறக்கணித்தது ஏன்..? ஆளுநர் விளக்கம்
கோழி கழுத்தில் சீனாவின் மாஸ்டர் ப்ளான்..! இந்தியாவுக்கு வங்கதேசத்தின் துரோகம்..!