முருகனுக்கு அரோகரா! துரைமுருகனை தொண்டர்களிடம் கோர்த்துவிட்ட தயாநிதி அழகிரி...

 
Published : Dec 26, 2017, 10:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
முருகனுக்கு அரோகரா! துரைமுருகனை தொண்டர்களிடம் கோர்த்துவிட்ட தயாநிதி அழகிரி...

சுருக்கம்

Azhagiri son durai dhayanidhi Tweet against Duraimurugan

திமுகவினரே காசுக்குவிலை போனார்களா திமுக தொண்டர்கள் துரைமுருகன் மீது கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? “முருகனுக்கு அரோகரா!”  என்று அழகிரியின் மகன் தயாநிதி  திமுக தலைமை கழகத்தில் திரி கிட்டி விட்டுரிக்கிறார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் பலம் வாய்ந்த எதிர்கட்சியான திமுக படுதோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் டெப்பாசிட் இழந்துள்ளது. இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் செய்தியாளர்கள் பதிலளிக்கையில் ஆர்.கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது. “ஆர்.கே நகரில் ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றுவிட்டது, பணத்தின் காரணத்தால் திமுக தோற்றுவிட்டது” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் துரைமுருகனின் கருத்தை சுட்டிக்காட்டி அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா ! என்று ட்வீட் போட்டு தொண்டர்களை அசிங்கபடுத்திவிட்டார் என கொளுத்திப்போட்டுள்ளார் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!