“ஆமைத் தலையர் ஜெயக்குமார்”, “இடிச்சப்புளி பழனிச்சாமி” தரை மட்டத்திற்கு இறங்கி அடிக்கும் தினகரன்...

 
Published : Dec 26, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
“ஆமைத் தலையர் ஜெயக்குமார்”, “இடிச்சப்புளி பழனிச்சாமி”  தரை மட்டத்திற்கு இறங்கி அடிக்கும் தினகரன்...

சுருக்கம்

Dinakaran teasing minister Jayakumar Edappadi palnisami

“ஆமைத் தலையர் ஜெயக்குமார்” என்றும் “இடிச்சப்புளி பழனிச்சாமி”  என அமைச்சர் ஜெயக்குமாரையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிஸ்டர் கூல் என பெயரெடுத்த தினகரன் உருவ கேலி செய்து பேசியிருப்பது அனைவரையும் முகம் சுளிக்கவைக்கிறது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அதிமுக தலைமை கழகத்தில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் தினகரன் ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த  தினகரன் அமைச்சர்களை விளாசி வருகிறார். அதுமட்டுமல்ல அவரது ஆதரவாளர்களும் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.

தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வறுத்தெடுத்து வருகின்றனர். இவர்கள் தான் இப்படி பேசுகிறார்கள் என்றால் அரசியல் நாகரிகம் தெரிந்தவர், மிஸ்டர் கூல் என பெயரெடுத்த தினகரனோ நேற்று அவர்களையே மிஞ்சும் அளவிற்கு தரை மட்டத்திற்கு இரங்கி அடித்துள்ளது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை “ஆமைத் தலையர், காமெடியன்” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை “இடிச்சப்புளி பழனிச்சாமி” என நக்கல் கலந்து கிண்டலடித்தார். இப்படி நக்கலாக உருவ அமைப்பை வைத்து ஒருவரை பேசுவது ஒரு தலைவனுக்கு அழகா?

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!