திமுகவில் திடீர் திருப்பம் : கோபாலபுரத்தில் அழகிரி , கனிமொழி ஒரு மணிநேரம் ஆலோசனை

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 03:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
திமுகவில் திடீர் திருப்பம் : கோபாலபுரத்தில் அழகிரி , கனிமொழி ஒரு மணிநேரம் ஆலோசனை

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை பார்க்க வந்த அழகிரி , கன்மொழி, மூத்தமகள் செல்வி ,அ.ராசா உள்ளிட்டோர் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

திமுகவுக்குள் நடக்கும் கோஷ்டி மோதல் காங்கிரஸ் அளவுக்கு பிரபலமானது. ஆனால் மு.க.ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக விளங்குவதால் மற்றவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். குறிப்பாக அழகிரி வெளியேற்றப்பட்டார். கனிமொழி ஒர்ரங்கட்டப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதியே ஒதுக்கப்பட்டார்.

திமுகவிலிருந்து மட்டுமல்ல ,தலைவரும் தந்தையுமான கருணாநிதியையே சந்திக்க முடியாத அளவுக்கு அழகிரி ஓரங்கட்டப்பட்டார். பல முறை அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முயன்றும் அவரை கருணாநிதியும் வேறு வழியில்லாமல் தவிர்த்தார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே அழகிரியை கட்சியில் இணைக்கலாம் என்ற கருணாநிதியின் யோசனைக்கு அப்போது மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். பல முறை கருணாநிதியை சந்திக்க முடியாமல் தவிர்க்கப்பட்ட அழகிரி இந்த முறை அதிரடியாக கோபாலபுரம் வந்து தந்தையை சந்தித்தார். நெகிழ்ச்சியான அந்த சந்திப்பு 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. 

பின்னர் இரண்டுமுறை வந்து சந்தித்தார். அப்போது அவருக்கு திமுகவில் இணைய தலைவர் ஒத்துகொண்டதாக கூறப்பட்டது. இதே போன்ற நிலையில் இருப்பபவர்தான் கனிமொழி , இவர் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். மற்றப்படி அனைத்து விஷயங்களிலும் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு பிடித்த மகளான கனிமொழி நோயுற்ற தந்தையை பார்க்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன் தினம் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய அழகிரி நேற்று காலை திடீரென கோபாலபுரம் வந்தார், அதற்கு முன்னரே கனிமொழி அங்கிருந்தார். கோபால புரத்தில் இருவரும்  சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சிறிது நேரத்தில் அழகிரியின் சகோதரி செல்வி,  அ.ராசா , டி.கே.எஸ்.இளங்கோவன் , சண்முக நாதன் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர்  ஒரு மணி நேரம் அனைவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியே வந்த அழகிரி பேட்டி எதுவும் தராமல் சென்றார்.

மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் போது இந்த சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மு.க.ஸ்டாலின் என்ற ஆதிக்கத்திற்கு எதிராக  அனைவரும் ஒன்று சேரும் கூட்டமாக தான் இது இருந்தது என்று கூறப்படுவதை யாரும் மறுக்க முடியாது என்பது யதார்த்தம்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!