“கே.சி.பழனிச்சாமியை வைத்து கொண்டு மணல் கொள்ளையை தடுப்போம் என பேசிய மு.க.ஸ்டாலின்”

First Published Nov 12, 2016, 9:46 AM IST
Highlights


திருப்பரங்குன்றம் தொகுதியை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசாநத்தம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின். சட்டமன்ற தேர்தலை போலவே தற்போதும் வண்ண வண்ண உடையணிந்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அதிமுக ஆட்சி நிறைவேற்றாமல் இருப்பது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிமுக அரசை மிரட்டி உதய் திட்டம், ஜி.எஸ்.டி. சட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் போன்வற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் வாங்கியிருப்பதாகவும் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணாதது குறித்து விமர்சனம் செய்த ஸ்டாலின்,  கரூரில் காவேரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை அதிமுக அரசு தடுக்காவிட்டால் தானே தலைமையேற்று அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என ஸ்டாலின் பேசியதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், கடந்த 15 வருடங்களுக்கு மேலாகவே நடித்துள்ளார். கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் குத்தகை எடுத்து அளவுக்கு அதிகமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களில் கே.சி.பழனிச்சாமியும் ஒருவர் ஆவார்.

அவரை வேட்பாளராக அறிவித்துவிட்டு அருகிலேயே நிற்கவைத்து கொண்டு மணல் கடத்தலை தடுப்பேன் என ஸ்டாலின் கூறியதை அங்கிருந்த மக்கள் ரசிக்கவில்லை. பூனையா பாலை காவல் காக்க போகிறது என்றும் பேசிக்கொண்டனர்.

click me!