
அரசியல் பிரவேசத்த்தை அறிவித்து ஒரு வாரம் கூட கடக்கவில்லை. அதற்குள் கருணாநிதியின் குடும்பத்தோடு கிட்டத்தட்ட நேருக்கு நேர் மோதலில் ரஜினி இறங்கிவிட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எப்படியாம்?...
ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்ததும் ‘அவர் எனது நெருங்கிய நண்பர். அவர் அரசியலுக்கு வருவதன் மூலம் பல மாற்றங்கள் நிகழும்.’ என்றார் அழகிரி. அதுமட்டுமில்லாமல் கடந்த புதன்கிழமையன்று காலையில் கோபாலபுரத்திற்கு கருணாநிதியை சந்தித்துவிட்டு வந்த அழகிரி ’நண்பர் ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்.’ என்றார்.
இதை கூர்ந்து கவனித்த ரஜினியின் வட்டாரம் சற்று அதிர்ந்தது. காரணம், அதிருப்தியாளராக தி.மு.க.வினுள் பெயர் பெற்று வைத்திருக்கும் அழகிரி தன்னை தொடர்ந்து புகழ்வதும், தான் அவரை சந்திப்பதும் திராவிடத்துக்கு மாற்றான அரசியலுக்கு சரிப்பட்டு வருமா? என்று யோசித்தார் ரஜினி. தடாலடி நபரான அழகிரியோடு ஆர கைகுலுக்குவது அரசியல் வட்டாரத்தில் தனது மதிப்பை உலுக்கிப் பார்த்துவிடாதா? என்கிற பயமும் ரஜினியை ஆட்டியது. இந்த ரூட்டை மாத்தணுமே! என்று யோசித்தவர் சட்டென ஒருதிட்டம் போட்டார். அதன்படிதான் கோபாலபுரம் சென்று ஸ்டாலினோடு கருணாநிதியை சந்தித்தார்.
இதன் மூலம் ‘நீங்கள் என்னை பார்க்க வருவதெல்லாம் இருக்கட்டும். நான் நினைத்தால் உங்கள் தம்பியோடு உங்கள் வீட்டுக்குள் சாதாரணமாக வளைய வந்துவிடுவேன். நான் எல்லாருக்கும் பொதுவானவன்.’ எனும் ரீதியில் அழகிரிக்கு சேதி சொல்லியது இந்த விசிட். இதனால் அழகிரி தாறுமாறாய் அப்செட் ஆனார். ரஜினியை சந்தித்துவிட்டு, அவரை அழைத்துக் கொண்டு போய் கருணாநிதியை சந்திக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்த அழகிரியின் கனவு டமால் ஆனது.
இருந்தாலும் அரசியலில் தனித்து விடப்பட்டிருக்கும் சூழலில் எமோஷனலாக செயல்படுவதை விட பல்லைக் கடித்துக் கொண்டு பக்குவமாய் இருப்பதே நல்லது என நினைக்கிறார் அழகிரி. அதனால் ரஜினி மீதான தனது அபிமானத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவரை சென்று சந்திப்பது உறுதியே! என்றே தகவல்.
இந்நிலையில் அழகிரிக்கு ஒரு செக் வைத்த ரஜினி, கோபாலபுரத்தில் ஸ்டாலினோடு சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசியிருந்தார். ஆனால் ‘தமிழகத்தில் திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் நிச்சயம் வீழ்வார்கள்.’ என்று ஸ்டாலின் தன்னை டார்கெட் செய்து பேசியிருந்ததால் கடுப்பான ரஜினி,
‘நான் கோபாலபுரத்தில் ஸ்டாலினை சந்திக்கவேயில்லை.’ என அலட்சியமாக பதில் சொல்லி அவருக்கும் நோஸ் கட் கொடுத்திருந்தார்.
ஆக மொத்தத்தில் சிங்கிள் விசிட்டில் கருணாநிதியின் இரண்டு மகன்களுக்கும் கல்தா கொடுத்திருக்கிறார் ரஜினி.