ஒரே ஒரு வாரியத் தலைவர் பதவி..! அமித்ஷாவிடம் விவசாயிகளை அடகு வைத்த அய்யாக்கண்ணு..!

By Selva KathirFirst Published Apr 9, 2019, 9:47 AM IST
Highlights

வாரியத் தலைவர் பதவி தருவதாக அமித்ஷா அளித்த ஒரே ஒரு வாக்குறுதியை பிரதமர் மோடிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வாரியத் தலைவர் பதவி தருவதாக அமித்ஷா அளித்த ஒரே ஒரு வாக்குறுதியை பிரதமர் மோடிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. வினோதமான போராட்டங்களால் இவர் தமிழகம் முழுவதும் பிரபலம். அதிலும் தமிழக விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டம் நடத்தி திரும்பியவர் அய்யாக்கண்ணு. அப்போது அய்யாக்கண்ணு வகையறாக்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் இந்திய அளவில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் நதிகள் இணைப்பு என்னும் தங்கள் கோரிக்கையை காது கொடுத்து கேட்க பிரதமர் மோடிக்கு எதிராக 111 விவசாயிகள் வாரணாசியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார் அய்யாக்கண்ணு. இதன்மூலம் பிரதமர் மோடியின் விவசாய விரோத எண்ணங்களை நாடு முழுவதும் எடுத்துச் சொல்ல முடியும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டியிடும் பட்சத்தில் அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் மோடிக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர் என்று உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி விடும். 

இதனால் அய்யாக்கண்ணுவை இதுநாள் வரை திரும்பிப் பார்க்காமல் இருந்த பாஜக மேலிடம் திடீரெனத் திரும்பிப் பார்த்தது. அவருக்கு கொடுக்க வேண்டிய வாக்குறுதிகளைக் கொடுத்து டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று டெல்லி சென்ற அய்யாக்கண்ணுவை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அதன் பிறகு வெளியே வந்து பேட்டியளித்த அய்யாக்கண்ணு மோடிக்கு எதிராக 111 விவசாயிகள் போட்டி எனும் நிலைப்பாட்டில் இருந்து விலகிக்கொள்வதாக தடாலடியாக அறிவித்தார். 

இது அய்யாக்கண்ணு சார்ந்திருக்கும் விவசாயிகள் சங்கத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக இருக்கும் அய்யாக்கண்ணு திடீரென மாறியதன் பின்னணியில் பாஜக தலைவர் அமித் ஷா கொடுத்த வாக்குறுதி இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அய்ய்கண்ணுக்கு ஒரு வாரியத் தலைவர் பதவி கொடுப்பதாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் அதன் காரணமாகவே மோடிக்கு எதிரான போட்டியில் இருந்து அய்யாக்கண்ணு விலகியதாகவும் அவரது சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.

 

இதுகுறித்து அய்யாக்கண்ணு விடம் கேட்டபோது நதிகள் இணைப்பு குறித்து வாக்குறுதி அளிக்க ராகுல் காந்தி மறுத்துவிட்ட நிலையில் அமித்ஷா நதிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு வாக்குறுதி அளித்ததால் மோடிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகி உள்ளதாக சுருக்கமாக  கூறி முடித்துக்கொண்டார்.

click me!