அயோத்தி வழக்கு நாளை தீர்ப்பு ! நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு !!

Published : Nov 08, 2019, 09:29 PM IST
அயோத்தி வழக்கு நாளை தீர்ப்பு !   நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு !!

சுருக்கம்

அயோத்தி வழக்கில்  நாளை காலை 10.30 மணிக்கு  தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.  

பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4 ம் தேதி முதல் தொடர்ந்து 10 வேலை நாட்களில் முக்கியமான 4 வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், அதில் அயோத்தி வழக்கும் ஒன்று எனவும் கூறப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் நவம்பர் 14ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் நவம்பர் .,13 அல்லது அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறக்கபிக்கப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டது.


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. உபி.,யில் 4000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு நாமே எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வழங்கவுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!