அமைச்சர், எம்எல்ஏ குறித்து இழிவாக பேசி ஆடியோ வெளியீடு.. திமுக மாவட்ட கவுன்சிலரின் கணவரை அலேக்கா தூக்கிய போலீஸ்

By vinoth kumarFirst Published Jan 21, 2022, 1:45 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி 9வது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலர் சரிதாவின் கணவர் முத்துக்குமார். வழக்கறிஞராக உள்ளார். அரசு விழாவில் தனது மனைவி சரிதாவுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் குறித்து  அவதூறு பேசி முத்துகுமரன் ஆடியோ ஒன்றை  சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது வைரலானது. 

ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் மற்றும் அமைச்சர் காந்தி குறித்து அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட திமுக பெண் மாவட்ட கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி 9வது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலர் சரிதாவின் கணவர் முத்துக்குமார். வழக்கறிஞராக உள்ளார். அரசு விழாவில் தனது மனைவி சரிதாவுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் குறித்து  அவதூறு பேசி முத்துகுமரன் ஆடியோ ஒன்றை  சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது வைரலானது.

இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் முத்துகுமரனுக்கு சொந்தமான உணவகத்தை தாக்கி தீ வைத்தனர். உடனே முத்துகுமாரை கைது செய்யக்கோரி நேற்றிரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 7 மணி முதல் சுமார் 2 மணிநேரத்தும் மேலாக நடைபெற்ற போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் போராட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முத்துகுமாரை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து, கைலாசகிரி பகுதியில் வீட்டில் இருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரை உமாராபாத் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் முத்துகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!