
சசிகலா ஓபிஎஸ்சுக்கு இடையே யாருக்கு அதிக எம்எல்ஏ ஆதரவு இருக்கிறது என்ற மில்லியன் டாலர் கேள்வி அனைவரையும் குடைந்து வருகிறது.
சசிகலா தன் பக்கத்தில் 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் ஓபிஎஸ் போட்ட சில குண்டுகள் வேலை செய்து விட்டன.
அதாவது எங்களுக்கு இப்போதைக்கு மெஜாரிட்டி இல்லை என்பதை ஒத்துகொள்கிறேன்.
அதே நேரத்தில் அவர்களுக்கும் (சசிகலா) மெஜாரிட்டி இல்லை என்பதை நீங்கள் ஏற்றுகொள்ளதான் வேண்டும் என ஒரே போடாய் போட்டுள்ளார்.
சில உண்மைகளை ஓபிஎஸ் ஆதாரங்களுடன் கான்பித்ததால்தான் தான் வித்யாசாகர் ராவ் இவ்வளவு மவுனம் காத்தாராம்.
இல்லையெனில் சசிகலா காண்பித்த லிஸ்டில் உள்ள 134 எம்எல்ஏக்களின் கையெழுத்தை பார்த்தவுடனே ஆட்சியமைக்க அழைத்திருப்பாராம்.
வடிவேலு படத்தில் கொண்டையை மறைக்க மறந்து விட்டு விதவிதமாக கெட்டப்பில் மாட்டி கொள்வது போல சசிகலா தரப்பில் சிறு சிறு தவறுகள் செய்யப்பட்டு விட்டதாம்.
குறிப்பாக ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் ஆரம்பம் முதலே ஓபிஎஸ் கோஷ்டியில் இருந்தார்.
ஆனால் எப்போதோ பெறப்பட்ட அவரது கையெழுத்து இவர்களின் ஆதரவு கடிதத்தில் கவர்னரிடம் காண்பிக்கப்பட்டது.
இப்படி சிறிய சிறய தில்லுமுல்லு வேலைகள் செய்ததாலும் சொத்து குவிப்பு வழக்கு முடிவு வர இருப்பதாலும் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டு ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
இந்த நிலையில்தான் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்டு வந்தார் வித்யாசாகர் ராவ்.
தற்போதய மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்டிருந்தார் ஆளுநர்.
அதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி இன்னும் ஒரு வாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க சொல்லவேண்டும் என ஆலோசனை கூறியிருக்கிறார்.
முகுல் ரோத்தகியின் இந்த ஆலோசனையை தொடர்ந்து கவர்னரும் இதை ஏற்று பல பரீட்சைக்கு நாள் குறிக்கலாம் என தெரிகிறது.
சட்டமன்றதில் பலப்பரிட்சை என்பது நிச்சயம் சசிகலா தரப்புக்கு பின்னடைவாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.