இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் கடலோர மாவட்டங்களில் மழை..

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2021, 1:31 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை யானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19 ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  
 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவரம் என்ன அது தெரிவித்துள்ளது. 

17-1 -2021 தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 18-1-2021  19-1-2021 மற்றும் 20-1-2021 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்சைய்யும் ஒட்டி இருக்கும்.  

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக குடவாசல் (திருவாரூர்) 5 சென்டி மீட்டர் மழையும், கடலாடி (ராமநாதபுரம்) 4 சென்டிமீட்டர் மழையும், மஞ்சளாறு (தஞ்சாவூர்) வேதாரண்யம் (நாகப்பட்டினம்) அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) வலங்கைமான் (திருவாரூர்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், வைப்பார் (தூத்துக்குடி) சூரக்குடி (தூத்துக்குடி) கும்பகோணம், காட்டுமன்னார்கோயில் (கடலூர்) தொண்டி (ராமநாதபுரம்) புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி) தல 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

வடகிழக்கு பருவமழை யானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19 ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  
 

click me!