அலங்காநல்லூரில் இபிஎஸ் முன்னிலையில் கெத்துகாட்டிய ஓபிஎஸ்..? அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்..

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2021, 12:46 PM IST
Highlights

மேடையில் ஓபிஎஸ்சின் ரியாக்சன் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்வருக்கும் துணை மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் உலா வரும் நிலையில், அவரின் நடவடிக்கை அதிக கவனம் பெற்றுள்ளது.  

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை பேச அழைத்தபோது, முதலில் முதல்வரை பேச சொல்லுங்கள் என  அவர் சைகை காட்டியது அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை  போட்டியை தொடங்கி வைத்தனர். அப்போது அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மரியாதை செலுத்தினர். பின்னர் மேடைக்கு வந்து இருவரும் அமர்ந்தனர். அப்போது நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உறுதிமொழி வாசித்தார். மாடுபிடி வீரர்கள் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் உறுதிமொழி எடுத்தனர். 

பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பச்சைக் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். அப்போது மேடையில் வருவாய்த்துறை அமைச்சர் முதலில் துணைமுதல்வர் பேசுவார் என கூறினார். அதை அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ் முதலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசட்டும் என்பதுபோல  சைகை காட்டினார். அதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதன் பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சிறப்பு விருந்தினர் அல்லது முக்கிய  நபர்கள் இறுதியாக பேசுவதுதான் வழக்கம்.  தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் கலந்துகொள்ளும்  ஒவ்வொரு அரசு விழாவிலும், அனைவரும் பேசி முடித்த பின்னர் இறுதியாகவே  எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றுவார். அதுவே வழக்கம்.  ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேடையில் இது தலைகீழாக நடந்துள்ளது. இறுதியாக ஓபிஎஸ் பேசியுள்ளார். 

மேடையில் ஓபிஎஸ்சின் ரியாக்சன் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்வருக்கும் துணை மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் உலா வரும் நிலையில், அவரின் நடவடிக்கை அதிக கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கும் அவரது ஆதரவாளர்கள், ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றும் அரசு விழா அல்ல,  இது எங்கள் பகுதி நிகழ்ச்சி,  இங்கே ஓ. பன்னீர் செல்வத்துக்கு தான் செல்வாக்கு அதிகம். எனவே தான் துணை முதலமைச்சர் அப்படி நடந்து கொண்டார். இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கின்றனர். எனவே அதிமுகவில் பிளவு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மேடையில் ஓபிஎஸ் நடந்துகொண்ட விதம் அதிமுகவில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியில் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
 

click me!